May 8, 2024
  • May 8, 2024
Breaking News
  • Home
  • முக்கிய செய்திகள்
  • அரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு
July 5, 2018

அரசு ஆணைக்கு எதிராக ஸ்டெர்லைட் கேட்ட இடைக்கால தடைக்கு பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

By 0 995 Views

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம், போலீஸாரின் துப்பாக்கிச்சூடு என்று தொடர்ந்ததில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடியாது என்று தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது.

ஆனால், இந்த அரசாணையை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்குப் புறம்பானது. ஆலை நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் ஆலை இயக்கப்பட்டு வந்ததுடன் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, ஆலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்…’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு நீதிபதிகள் அமர்வில் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

ஜூலை 17-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைததுடன் ‘வேதாந்தா’ நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு பத்து நாள்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.