May 2, 2024
  • May 2, 2024
Breaking News

Monthly Archives: July 2018

நாட்டை நல்வழிப்படுத்த வருடத்துக்கு 10 படமெடுக்கும் நடிகர் கரிகாலன்

by on July 21, 2018 0

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகி தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருக்கும் வில்லன் நடிகர் கரிகாலன். அதில் தமிழில் ரமணா, அரவான், அடிமைச் சங்கிலி, நிலாவே வா, கருப்பு ரோஜா, தயா, தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவரே இயக்கி நடித்த படம் ‘வைரவன்’. அரவான் படத்துக்குப் பின் சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார். […]

Read More

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சீமராஜா இசையை மதுரையில் வெளியிடச் செய்தது – ஆர்டி ராஜா

by on July 21, 2018 0

நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘சீமராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் நடத்துகிறார் 24ஏஎம் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா. ஆகஸ்டு 3ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த இசை விழா திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுசரி… மதுரையில் ஏன் இசை வெளியீடு..? காரணம் சொல்கிறார் ஆர்டி ராஜா… “தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம் மதுரை. நாங்கள் படத்தைத் தொடங்குவதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில்தான் நடத்துவது என்பதில் […]

Read More

ஆடி 18ல் தேடி இசைக்கும் பூமராங் – ஆடியோவை சோனி வாங்கியது

by on July 20, 2018 0

‘ஆடிப் பட்டம் தேடி விதை’ என்பார்கள் பெரியோர். இதையே சினிமா மொழியாக்கி ‘ஆடிப் பட்டம் தேடி இசை’ என்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அவரே தன் ‘மசாலா பிக்ஸ்’ நிறுவனத்துக்காக தயாரித்து இயக்கும் ‘பூமராங்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டை ஆடி 18 அன்று (03-08-2018) அறிவித்திருக்கிறார். படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ‘ரதன்’. அதர்வா முரளி கதாநாயகனாக மேகா ஆகாஷ் நாயகியாகும் படத்தில் ஆர்ஜே பாலாஜி, சுஹாசினி மணிரத்னம், உபென் படேல், காமெடி […]

Read More

அறிமுக இயக்குநரின் மண்டையை உடைத்த அஞ்சலி

by on July 20, 2018 0

தலைப்பைப் பார்த்து அந்த அறிமுக இட்யக்குநரைப் பற்றி ஏதும் ஏடாகூடமாக முடிவெடுத்து விடாதீர்கள். முழுதும் படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். பிரபல ஒளிப்பதிவாளரும் மதுரை வீரன் படத்தில் இயக்குனருமான பி.ஜி.முத்தையா தயாரிக்கும் நான்காவது படம் ‘லிசா’ 3டி. அதிநவீன 3டி டெக்னாலஜி ஸ்டீரியோ ஸ்கோப்பில் இந்தியாவில் தயாராகும் முதல் ஹாரர் திரைப்படம் லிசா. இந்த ஹாரர் படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடிகை அஞ்சலி நடிக்கிறார். படத்தை அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்குகிறார். ‘ஏமாலி’ படத்தின் நாயகன் […]

Read More

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகை

by on July 19, 2018 0

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பெயரை குறிப்பிட்டு சி.பி.ஐ புதிய குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. இதன் விபரம்… மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், 2006-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஏர்செல் நிறுவனத்தில் ரூ. 3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கான அனுமதியை முறையாகப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அத்துடன் இந்த அனுமதியைப் பெற சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. […]

Read More

சகோதர அன்புக்காக பேய்பசி க்கு இசையமைத்தேன் – யுவன்

by on July 19, 2018 0

‘ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்’ சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பேய்பசி’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். இயக்குநர்கள் வெங்கட்பிரபு, நலன் குமாரசாமி நடிகர்கள் ஆர்யா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்வில் படம் பற்றி இயக்குநர் ஸ்ரீநிவாஸ் கவிநயம் பேசியதிலிருந்து…. “முழுக்க டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் நடக்கும் முதல் படம் இது. இந்தப் […]

Read More

சிவாஜி, கமல் நடித்திருக்க வேண்டிய வேடத்தில் நான் – விஜய் சேதுபதி (உருவாக்க வீடியோ)

by on July 18, 2018 0

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற சிறிய படத்தைத் தந்து பெரிய வெற்றியை அள்ளிய விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணீதரன் ஆகியோரின் இணைப்பில் மீண்டும் உருவாகும் புதிய முயற்சிப்படம் ‘சீதக்காதி’. இது விஜய் சேதுபதியின் 25வது படமாகவும் அமைகிறது. கோவிந்த் மேனன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பேஷன் ஸ்டுடியோஸ்’ தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி இதுவரை ஏற்காத புராஸ்தடிக் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். அதைப்பற்றி அவரே கூறும்போது, “இதில் நான் […]

Read More

பாரம்பரிய இசையில் சரித்திரம் படைக்கும் ரமேஷ் வினாயகம் – அருணா சாய்ராம் புகழாரம்

by on July 18, 2018 0

தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அறிந்த இசையமைப்பாளர்களில் ரமேஷ் வினாயகமும் ஒருவர். திரையிசை தாண்டி கர்நாடக இசை எனப்படும் நம் பாரம்பரிய இசையில் நல்ல அனுபவமும், தேர்ச்சியும் பெற்றவர். அவர் வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்லாமல் நல்ல பாடகர் இசை பயிற்றுவிக்கும் ஆசிரியர் மற்றும் ஒரு இசை ஆராய்ச்சியாளர் ஆவார்.  தமிழ் தவிர ஒரு ஹாலிவுட் திரைப்படத்திற்கு (பென் கிங்க்ஸ்லீ நடித்த ‘A Common Man’) இசையமைத்திருக்கும் இவர் இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் […]

Read More