April 27, 2024
  • April 27, 2024
Breaking News
  • Home
  • Uncategorized
  • கபிலவஸ்து திரைப்பட விமர்சனம்

கபிலவஸ்து திரைப்பட விமர்சனம்

By on March 7, 2019 0 552 Views

திரைப்படங்களில் ஒன்று ஏழைகளின் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நடுத்தர வர்க்க பிரச்சினை. அவ்வப்போது பணக்காரர்களின் வாழ்வியல் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தெருவோரம் வாழும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரம் இருக்கிறது..?
அதற்கு நான் இருக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார் இயக்குநர் நேசம் முரளி. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் படத்தின் களம் ஒரு பொதுக் கழிப்பிடம்.
பொதுக்கழிப்பிடத்திலேயே பிறந்த அவருக்குத் தாய் தந்தை யாரென்றே தெரியாது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே பாதுகாவலராக வாழ்க்கையை ஓடீக்கொண்டிருக்க, அவரைப்போலவே வீடில்லாத ஒருசிலரும் அந்த கழிப்பிடத்தின் அருகிலேயே தங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்தான் மொத்தப்படமும். மகிழ்ச்சி, சோகம், காதல், மோதல்… ஏன் கல்யாணமாகிய நாயகனின் முதலிரவு கூட அந்தப் பொதுக் கழிப்பிடத்தில்தான் நடக்கிறது.
அந்தக் கழிப்பிடத்திலிருந்து நேசம் முரளி பலவந்தமாக வெளியேற்றப்பட அழுது புலம்பிக்கொண்டே செல்லும் அவர் தன் குடும்பத்தைத் தேடி வடமாநிலங்களுக்கெல்லாம் பயணப்பட, அவரை அங்கே பிரசவித்த தாயான மீராகிருஷ்ணா ஏறக்குறைய 30 வருடங்களுக்குப் பிறகு அவரைத் தேடி வர… பிளாஷ்பேக்கில் விரிகிறது கதை.
நேசம் முரளிக்கு அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் வேடம் மிகவும் பொருந்துகிறது. அத்துடன் முழு ஸ்கிரிப்டும் அவருக்குள்ளேயே இருப்பதால் அதில் ஒன்றி நடித்திருக்கிறார். இப்படியொரு கதையை எடுக்கத் துணிந்ததற்கே அவரைத் தனியாகப் பாராட்டலாம்.
அவராவது சிந்தித்ததை எடுக்க கழிப்பிடத்துக்குள் கஷ்டப்பட்டார் என்லாம். ஆனால், அவரது காதலியாக பின்னர் மனைவியாகும் நந்தினிதான் மிகவும் பாவம்… அவருடனேயே மொத்தப்படத்தையும் கழிப்பிடத்துக்குள்ளேயே உருண்டு புரண்டு படுத்து எழுந்து… பரிதாபம். ஆனால், அந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டியே ஆக வேண்டும்.
இவர்களைத் தாண்டி முரளின் தன் தங்கையாக சுவீகரித்துக் கொண்டிருக்கும் பேபி ஐஸ்வர்யா