‘தர்மபிரபு’ மற்றும் ‘கூர்க்கா’வின் வெற்றியைத் தொடர்ந்து யோகிபாபு நாயகனாகும் படம் ‘காதல் மோதல் 50 /50’ விரைவில் வெளியாகவிருக்கிறது. ஆக்ஷன் கலந்த பேய்ப்படமாம் இது.
தரண்குமார் இசை அமைக்க, பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் யோகிபாபுவிற்கென பிரத்யேக பிரமாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் அமைக்க உள்ளார்.
Kadhal Mothal 50 50
தற்போது உதயநிதிஸ்டாலினை நாயகனாக வைத்து தயாராகி கொண்டிருக்கும் ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தின் தயாரிப்பாளர் திரு.வி.என்.ஆர், இப்படத்தினை தன் ‘லிபிசினி கிராப்ட்ஸ்’ நிறுனத்துக்காகத் தயாரித்து வருகிறார்.
படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் நிலையில் உள்ளது .