எது எந்தப் படத்துக்கு பலமோ அதுவே அந்தப்படத்துக்கு பலவீனமான நிகழ்ச்சி ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்துக்கு ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
எல்லா இரண்டாவது பாகப் படங்களைப் போலவே ‘இந்தியன் 2’ படத் தொடக்கமும் வெகு விமர்சையாக நடந்தது. கமல் ‘கிழ’ வேடமெல்லாம் போட்டு படப்பிடிப்பும் தொடங்கியது. அப்போதே தன் ஒப்பனை குறித்து அதிருப்தி தெரிவித்த கமல், அதைச் சரிசெய்துவிட்டு படப்பிடிப்பைத் தொடரலாம் என்று நிறுத்தியதாக செய்தி வந்தது.
அத்துடன் அவர் அரசியலில் பிஸியாகவே ஷூட்டிங் தொடரவில்லை. அதற்குள் படத்தின் பட்ஜெட் பற்றி தயாரிப்பு நிறுவனமான ‘லைகா’ அதிருப்தி தெரிவித்ததுடன் ஷங்கருக்கு பட்ஜெட் விஷயத்தில் அக்ரிமென்ட் போட வற்புறுத்தியதாகவும் ஷங்கர் அதற்கு ஒத்துக் கொள்ளாததாகவும் செய்திகள் வந்தன.
அதனால், ஷங்கர் வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள, எல்லோருமே கமலின் அரசியல் பிரவேசம் குறித்து பின்வாங்கியதாகத் தெரிகிறது. அதேபோல் எந்திரனில் தனக்குக் கைகொடுத்த சன் பிக்சர்ஸ் கதவையும் ஷங்கர் தட்டியதாகத் தெரிகிறது.
அங்கேயும் கமலின் அரசியல்தான் முட்டுக் கட்டை போட்டிருக்கிறது. திமுகவை அவர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்ததால் அவர்களும் கதவைச் சாத்தி விட்டார்களாம்.
ஆக, கமலே ‘இந்தியன் 2’ வுக்கு புரட்யூசர் பார்த்தால்தான் உண்டு என்ற நிலையில் படம் நடக்காமல் தூங்கிக் கொண்டிருக்கிறது.
‘இந்தியன் 2’தான் தன் கடைசிப் படமாக இருக்கும் என்று கமல் சொன்னதாக ஒருகட்டத்தில் தகவல் வந்தது. இப்போது அதுவும் இல்லை போலிருக்கிறது.
ஓரு சகல கலா வல்லவனை அரசியல் காவு வாங்கி விட்டது..!