நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார்.
ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் விஷ்ணு விஷால். தனது மனைவிக்கு இருந்த சந்தேகம்தான் தங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட காரணம் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் நடிகர் விஷ்ணு விஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக உள்ளதாக தகவல் வெளியாகியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
அதில் நடிகர் விஷ்ணு விஷாலை கட்டிப்பிடித்திருக்கிறார் ஜுவாலா கட்டா. இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், “இதனலாதான் விவாகரத்து ஆயிடுச்சா..?” என கேட்டுள்ளனர்.
இருவரும் நெருக்கமாக உள்ள இந்த போட்டோக்கள் இப்போது வைரலாகி வருகிறது.
Vishnu Vishal’s personal photos go viral