March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு என்ன வெறித்தனமான ஆசை – வரலட்சுமி காட்டம்
May 21, 2020

என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு என்ன வெறித்தனமான ஆசை – வரலட்சுமி காட்டம்

By 0 414 Views

நடிகை வரலட்சுமிக்கு திருமணம் பேசி முடிவாகி விட்டது என்றும் அவரது குடும்ப நண்பரான சந்தீப்தான் மணமகன் என்றும், சந்தீப் இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான பொறுப்பில் உள்ளார் என்ற செய்தி யும் வெளியாகி பரபரப்பை ஏற்படு த்தியது.

இந்த செய்திக்கு பதில் சொன்ன வரலட்சுமி. ,‘எனக்கு கல்யாணம்-னா அது எனக்குத்தான் கடைசியா தெரியும் போல… அதே முட்டாள்தனமான வதந்திகள்..என் கல்யாணத்துல மத்தவங்களுக்கு அப்படியென்ன வெறித்தனமான ஆசைன்னு தெரியலை…” என்றிருக்கிறார்.

” அத்துடன் எனக்கு கல்யாணம் நடக்கப் போகுதுன்னா, நிச்சயம் நான் எல்லார்கிட்டயும் வெளிப்படையா சொல்லுவேன். கூரை மேலே ஏறி கத்தி சொல்லுவேன். போதுமா? இதைப் பத்தி எழுதிக்கிட்டு இருக்கற எல்லா மீடியா மக்களே, நான் இப்ப கல்யாணம் செஞ்சுக்கலை. சினிமாவைவிட்டு விலகறதா இல்லை…’ என்று காட்டமாக தெரிவித்திருக்கிறார் வரு. 

ஓகே கூல் வரு… நீங்க எப்ப கூரை மேல வருவீங்க வருவீங்கண்ணு பாத்துகிட்டு இருக்கோம்…