August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • எனக்கா ரெட்கார்டு எடுத்துப் பாரு ரெகார்டு – சிம்பு அதிரடி பாடல்
November 24, 2018

எனக்கா ரெட்கார்டு எடுத்துப் பாரு ரெகார்டு – சிம்பு அதிரடி பாடல்

By 0 1063 Views

சினிமா செய்திகளில் கலக்குவது சிம்புவும், அவரது ரசிகர்களும்தான்.

அவர் நடித்து பொங்கல் வெளியீடாக வரும் என்று எதிர்பார்த்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பட வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்களுடனான அவரது பிரச்சினையை முடிக்காவிட்டால் ‘ரெட் கார்டு’ போடப்படும் என்ற தகவல் பரவியது. 

உடனே அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்து விஷாலுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதும் அவர்களை சிம்பு அமைதிப் படுத்தி, “வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்ததும் தெரிந்த சங்கதிகள்.

முடிந்தது என்று நினைத்த அந்த விஷயம் இன்னும் முடிவடைந்ததாகத் தெரியவில்லை. இப்போது அந்தப்படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று விரைவில் வெளிகாவிருப்பதாக சிம்புவே அறிவித்திருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால், பாடல் வரிகளில் இருக்கிறது விவகாரம்.

“எனக்கா ரெட்கார்டு… எடுத்துப்பாரு ரெகார்டு…” என்று ஆரம்பிக்கிறதாம் அந்தப் பாடல். அந்தப் பாடலுக்கு இசையமைத்த ஹிப் ஹாப் ஆதியே அதை எழுதியிருக்கிறாராம்.

பாடல் வெளியானால் மீண்டும் சிம்புவும், சிம்பு ரசிகர்களும் செய்திகளில் வைரல் ஆவார்கள்.