February 16, 2025
  • February 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லாக் டவுனில் இசை கற்றுக் கொள்ளும் வாணி போஜன் வீடியோ
April 18, 2020

லாக் டவுனில் இசை கற்றுக் கொள்ளும் வாணி போஜன் வீடியோ

By 0 850 Views

‘ ஓ மை கடவுளே ‘ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் வாணி போஜன். ஏற்கெனவே சின்னத்திரையில் தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர்.

இதனால் இவரது சினிமா  ரசிகர்கள் இவரை பார்ப்பதற்கு சீரியல் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சின்னத்திரையின் மூலம் பல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வாணிபோஜனை , தொகுப்பாளினி ஒருவர் சின்னத்திரையில் இவர் தான் நயன்தாரா என்று கூப்பிட, சின்னத்திரை நயன்தாரா ‘ ஆனார் வாணி.

வாணி தெலுங்கில் 2019 ஆம் ஆண்டில், ‘ மீக்கு மாத்ரமே செப்தா ‘ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். அந்தப் படம் பெரிய அளவில் ஹிட் ஆனதைத் தொடர்ந்து தமிழிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன.

அப்படி கிடைத்த வாய்ப்பு தான் ‘ ஓ மை கடவுளே…’

இவர் அவ்வப்போது போட்டோஷுட் நடத்துவது வழக்கம், அந்த போட்டோக்கள் இளைஞர்கள் மத்தியில் எப்போதும் வைரலாவதுண்டு.

அந்தவகையில் இவர் ஊரடங்கு காலத்தில் பல வகையான போட்டோக்களை வெளியிட்டு வருபவர் இன்னிக்கு மொபைலில் இசை கற்றுக் கொள்ளும் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருக்கிறார்..

அதை கேட்டு ஆஹா.. ஓஹோ- என்று புகழும் ரசிகர்களின் கமெண்ட்டைப் படிச்சா புல்லரிக்குது… நீங்களும் பார்த்து புல்லரிக்க கீழே வீடியோ…