January 24, 2026
  • January 24, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நான்கு மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம் தி மார்க்ஸ்மேன்
February 23, 2021

நான்கு மொழிகளில் வெளியாகும் ஹாலிவுட் திரைப்படம் தி மார்க்ஸ்மேன்

By 0 523 Views

ஹாலிவுட் திரைப்படமான ‘தி மார்க்ஸ்மேன்’, ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸால் வெளியிடப்படுகிறது

கைபா இன்க் நிறுவனத்தின் தலைவரான திருச்சியை சேர்ந்த தமிழர் டெல் கே கணேசன், முகா என்னும் காணொலி முறையை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். மேலும், ‘டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமல் கூப்பன்’ போன்ற ஆங்கில திரைப்படங்களை தயாரித்து நெப்போலியனை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தியவரும் இவரே.

தற்போது இவர், உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஹாலிவுட் திரைப்படமான லியாம் நீசனின் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ ஆங்கிலம், தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடுகிறார்.

செலிப்ரிட்டி ஃபிலிம் இண்டெர்நேஷ்னல் மற்றும் யூ எஃப் ஓ மூவிஸுடன் இணைந்து டெல் கணேசனின் கைபா ஃபிலிம்ஸ் ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ பிப்ரவரி 26 அன்று இந்தியாவில் வெளியிடுகிறது.

ராபர்ட் லோரென்ஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம், பண்ணை உரிமையாளரான 60-வயது லியாம் நீசன், தாயை இழந்த 11 வயது சிறுவனை மெக்சிகோவின் போதை மருந்து கும்பலிடம் இருந்து எப்படி காக்கிறார் என்பதை விறுவிறுப்பான முறையில் அதிரடியாக விவரிக்கிறது.

திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தயாரிப்பாளர்கள் டெல் கணேசன் மற்றும் ஜி பி திமோதியோஸ், “இந்திய ரசிகர்கள் இப்படத்தை ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர். அவர்களுக்காக அவர்களின் மொழிகளிலேயே ‘தி மார்க்ஸ்மேன்’-ஐ நாங்கள் வெளியிடவிருக்கிறோம். இது ஒரு மிகச் சிறந்த திரைப்படம் என்பதால், மொழிகளை கடந்து ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு தருவார்கள் என நம்புகிறோம்,” என்றனர்.

கைபா ஃபிலிம்ஸின் அஷ்வின் டி கணேசன் (தி ஏடிஜி) கூறுகையில், “தனது முந்தைய படங்களின் வெற்றியின் காரணமாக லியாம் நீசன் உலகெங்கும் ரசிகர்களின் மனங்களை வென்றுள்ளார். அவரது புதிய திரைப்படத்தை இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக படைப்பதற்கு மகிழ்ச்சி அடைகிறோம்…” என்றார்.

ரசிகர்கள் ஒரு அதிரடி ஆக்ஷன் விருந்துக்கு தயாராகலாம்..!

இந்தப் படத்தின் தமிழ் டிரைலர் கீழே…