April 16, 2025
  • April 16, 2025
Breaking News

Tag Archives

பிகில் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல்..?

by on October 3, 2019 0

விஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது. கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’ படத்திலும் தொடர்கிறது. பின்னணியில் இருப்பது அரசியலேதான். ரஜினி தன் ஒவ்வொரு படத்தின்போதும் அரசியல் அஸ்திரத்தைக் கையிலெடுத்து படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ளும் தந்திரத்தை […]

Read More

நெட்டில் கசிந்தது பிகில் டீஸர்தானா..?

by on September 29, 2019 0

ஏற்கனவே ‘பிகில்’ படத்தின் ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ பாடல்கள் வெளியிடப்படும் முன்னரே நெட்டில் கசிந்துவிட, இன்று அதிக எதிர்பார்ப்பிலுள்ள ‘பிகில்’ டீஸர் கசிந்துவிட்டதாக சில டீஸர்கள் உலா வருகின்றன. முதல் விஷயம் அது படக்குழுவால் வெளியிடப்பட்ட டீஸர் போல் தெரியவில்லை. இரண்டாவதாக ஒரு டீஸருக்கும் இன்னொன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இதுவே சொல்லிவிடும் இரண்டுமே உண்மையில்லை என்று. அத்துடன் விஜய் ரசிகர்களுக்காக இயங்கிவரும் ட்விட்டர் பக்கங்களும் இது ரசிகர்கள் ஆர்வமிகுதியால் செய்த வேலை என்று அறிவித்திருக்கின்றனர். சரி… ஏன் […]

Read More

ஆளப் போறான் தமிழன் போல் பிகில் சிங்கப் பெண்ணே லீக்கானது

by on July 16, 2019 0

அட்லீ – விஜய் கூட்டணியில் ‘தெறி’, ‘மெர்சல்’ வெற்றிப் படங்களைத் தொடர்ந்து மூன்றாவதாக உருவாகி வரும் படம் ‘பிகில்’. கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ‘மைக்கேல்’ மற்றும் ‘பிகில்’ என்று அப்பா மகனாக நடித்துள்ளார். விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், விவேக், ஆனந்தராஜ், இந்துஜா, வர்ஷா, யோகி பாபு, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். . ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல் முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், விஜய் […]

Read More

விஜய் பிறந்தநாளுக்கு அட்லீ தரும் பரிசுகள்

by on June 21, 2019 0

விடிந்தால் (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாள். அதைக் கொண்டாட விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கும் தருணத்தில் இன்று விஜய்யின் தற்போதைய படத்தை இயக்கி வரும் அட்லீ மகத்தான இரண்டு பரிசுகளைக் கொடுத்திருக்கிறார். ஒன்று மாலை ஆறு மணிக்கு வெளியானது. அது விஜய் படத்தலைப்பும், முதல் பார்வையும். அடுத்த பரிசு இன்று இரவு 12 மணிக்கு இரண்டாவது லுக்காக வெளியாகவிருக்கிறது. ‘பிகில்’ என்று தலைப்பும், முதல் பார்வையும் வெளியான நிமிடத்திலிருந்தே சமூக வலைதளங்கள் பற்றிக்கொண்டு இதுதான் நம்பர் ஒன் ட்ரெண்டிங்காகியிருக்கிறது. […]

Read More

விஜய் 64 படம் பற்றி நிலவும் குழப்பங்கள்

by on May 15, 2019 0

இப்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் பற்றி காற்றுவாக்கில் பல தகவல்கள் வந்து கொண்டிருந்தன. நேற்று விஜய்யின் 64வது படம் பற்றி முக்கியமான தகவல் வெளியானது. அந்தப்படத்தை ஐசரி கணேஷும், விஜய்யின் உறவினர் பிரிட்டோவும் தயாரிக்கவிருப்பதாக வந்த தகவல்தான் அது. அந்தப்படத்தை மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறாராம். சரி… இந்தத் தகவல் உண்மையானதா என்றால் அதிலும் ஒரு குழப்பம் […]

Read More