February 25, 2021
  • February 25, 2021
Breaking News
  • Home
  • யோகிபாபு

Tag Archives

யோகிபாபு திருமண வரவேற்பு எப்படி நடக்கும்..?

by on March 25, 2020 0

காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அது ரகசியமாக குலதெய்வம் கோவிலில் நடந்ததால் திருமண வரவேற்பை சென்னையில் பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார்.  அதற்காக ஏப்ரல் 5-ம்தேதியை அவர் நிச்சயித்தார். பல பேருடன் கலந்து ஆலோசித்து சென்னையின் நட்சத்திர ஓட்டலான ஹில்டன் ஓட்டலில் வைத்து திருமண வரவேற்பு நடத்துவதாக இருந்தது.  அதனால், கொரோனா பீதியால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தன் திருமண வரவேற்பு அழைப்பிதழை விஐபிகளுக்கு நேரிலேயே சென்று வழங்கி […]

Read More

டகால்டி திரைப்பட விமர்சனம்

by on February 1, 2020 0

ஒரு படம், ஒற்றே படம் சந்தானத்தை முதல் நிலை கமர்ஷியல் ஹீரோக்கள் வரிசையில் கொண்டு வந்து நிறுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அத்தனை ரஜினி, விஜய், அஜித் படங்களைக் குலுக்கிப்போட்டு அதில் நாம் கண்டு ரசித்திருக்கும் காட்சிகளை அப்படியே அலேக்கி ஒரு கதை செய்திருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த். அதில் கில்லி, போக்கிரி தொடங்கி அதிசயப்பிறவி வரை படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு இந்திய நிலமெங்கும் டிராவல் அடிக்கிற ஆக்ஷன் லைன் எனும்போது தனியாகக் […]

Read More

யோகிபாபுவை டென்ஷனாக்கிய தனுசு ராசி டீம்

by on December 4, 2019 0

இன்றைக்கு இருக்கும் நடிகர்களில் காமெடி சூப்பர் ஸ்டார் என்றால் யோகிபாபுதான். நாள் கணக்கு கால்ஷீட்டில் அவரை நடிக்கவைத்துத் தங்கள் படங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்கிறார்கள் இன்றைய கோலிவுட் படைப்பாளிகள். அப்படித்தான் அவரை சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குநராகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்துக்குக் கேட்டிருக்கிறார்கள். அவரும் ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அனுபவமில்லாத இயக்குநருக்கு யோகிபாபுவை எப்படிப் பயன்படுத்துவது என்றே தெரியாமல் சொதப்பியதில் அவரை இரண்டு நாள்களில் வெட்டியாக்கி இரண்டொரு வசனம் பேசவைத்து அனுப்பியிருக்கிறார்கள். அதுவும் நின்ற இடத்திலேயே நிற்க […]

Read More

யோகிபாபுவுடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை வாக்குமூல வீடியோ

by on November 27, 2019 0

கடந்த சில தினங்களுக்கு முன் யோகிபாபு திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஒரு நடிகையின் படமும், செய்தியும் வலை தளங்களில் பரவியது. ஆனால், தன் திருமணச் செய்தி குறித்து மறுத்த யோகிபாபு அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன் என்றார். இப்போது யோகிபாபுவுடன் இணைத்துப் பேசப்பட்ட நடிகை பேசிய வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது. அவர் யோகிபாபு குறித்து என்ன சொல்லியிருக்கிறார் என்று பாருங்கள்…  

Read More

தன் மீது பரவும் தவறான செய்திகளை மறுக்கிறார் யோகிபாபு

by on October 4, 2019 0

‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் நடிகர் யோகிபாபு. தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார் தான் எழுதி கொடுக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்த இரு செய்திகளையும் மறுத்துள்ளார் யோகிபாபு. மேலும் இது தொடர்பாக அவர் […]

Read More

அஞ்சலியை வச்சுக் காமெடி பண்ணப் போறாங்க…

by on September 11, 2019 0

அஞ்சலியுடன் யோகி பாபு மற்றும் விஜய் டி.வி.புகழ் ராமர் நடிக்கும் புதிய நகைச்சுவைப் படத்தின் படப்பிடிப்பு இன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. சோல்ஜர்ஸ் பேக்டரி சார்பில் உருவாகும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் சினீஸ்… விலா நோகச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகளும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் நிறைந்த கதையாக இதை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ். முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிகை அஞ்சலியை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்க்கலாம். அஞ்சலியின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையை இப்படம் ஏற்படுத்தும். […]

Read More

ஜாம்பி திரைப்பட விமர்சனம்

by on September 7, 2019 0

ஒரு படத்தின் முதல் ஷாட்டே அது எப்படிப்பட்ட படம் என்று சொல்லிவிடும் என்பார்கள். ஆனால், அந்த இலக்கணமெல்லாம் இதுபோன்ற ‘ஜல்லியடித்து ஜாம் தடவும்’ படத்துக்குப் பொருந்தாது என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யலாம். முதல் ஷாட்டில் ஆலைக் கழிவில் சிக்கி சிதைந்து கிடக்கும் கோழிகளை எடுத்து சுத்தம் கூட செய்யாமல் சிக்கன் ஃபிரை செய்வதைக் காட்டுகிறார்கள். அந்த ஆலைக்கழிவும், அந்த ஆலையின் ஏரியல் வியூ ஷாட்டும், கோழிக்கறியை எப்படி சுகாதாரமில்லாமல் சமைக்கிறார்கள் என்பதைக் காட்டும் காட்சிகளும் படம் […]

Read More