November 25, 2024
  • November 25, 2024
Breaking News
  • Home
  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Tag Archives

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்பு – முதல்வர்

by on April 9, 2020 0

சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- தமிழகத்தில் 738 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதியான நிலையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலையங்களில் 2.10 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது. 19 ஆய்வகங்கள் மூலம் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது. 6,095 பேருக்கு இதுவரை சோதனை […]

Read More

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by on April 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதிலிருந்து:- வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது.  மக்கள் சமூக இடைவெளியை […]

Read More

தமிழக அரசு தொடங்கிய கல்வி தொலைக்காட்சி

by on August 26, 2019 0

கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளையும் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் நடந்து வந்த நிலையில் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு இன்று தொடங்கியது. கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற நிகழ்வில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கி வைத்தார். கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டி.வி.யில் […]

Read More

சுப்ரீம் கோர்ட் கிளை சென்னையில் அமைய வெங்கையா நாயுடு விருப்பம்

by on August 11, 2019 0

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (11-08-2019) நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவே தலைமை தாங்க, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நூலை வெளியிட்டார். இவ்விழாவில் […]

Read More

ஐந்து முறை தமிழக முதல்வர்… சமூக நீதிக்காகப் போராடியவர் கலைஞர் – முதல்வர் புகழாரம்

by on August 7, 2018 0

இன்று (ஆகஸ்ட் 7) மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு தமிழக முதல்வர் கே. பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:- “தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சரும் இந்தியாவின் மிக மூத்த அரசியல்வாதியும், 50 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். பள்ளிப் பருவத்தில் […]

Read More

100-ல் நான்கைந்து பேர்தான் 8 வழிச்சாலைக்கு நிலம் தர மறுக்கின்றனர் – முதல்வர்

by on June 24, 2018 0

சென்னையிலிருந்து சேலத்துக்கு பசுமை வழிச்சாலையாக எட்டுவழிச்சாலை அமைக்க அரசால் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதற்கு எதிராக விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புகளைக் காட்டி வருகின்றனர். ஆனாலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளும், கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கற்கள் நடும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் திட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதிலிருந்து… “சென்னை – சேலம் விரைவு […]

Read More