வரும் பொங்கல் ஏகத்துக்கு கோலாகலமாக இருக்கும் போலிருக்கிறது. ஏற்கனவே பொங்கலுக்கு ரஜினியின் ‘தர்பார்’ வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அவர் படத்துடன் அவரது மருமகனான தனுஷின் ‘பட்டாஸ்’ படமும் பொங்கல் போட்டியில் குதிக்கும் எனத் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையால் தனுஷ் அவருடன் போட்டியிட்டது ஆச்சரியமில்லை. ஆனால், டிசம்பரில் வெளியாவதாக இருந்த சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் சில தொழில் நுட்ப காரணங்களால் தள்ளிபோய் அதுவும் பொங்கலுக்கு வெளியாவதாக நம்பப்படுகிறது. இதுவே ஆச்சரியத்தைத் தர, இப்போது மிர்ச்சி […]
Read Moreவட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும் இருந்திருக்கிறார்கள். தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய, சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்து மனிதனின் கதையை ரத்தமும், கண்ணீரும் தெறிக்கச் சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். பஞ்சமி நில மீட்பு காலத்தில் தொடங்கித் தொடர்கிற […]
Read Moreபல முயற்சிகளுக்குப் பின் நாளை வெளியாகவிருந்த ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் இம்முறையும் ஏமாற்றி விட்டது. கௌதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடித்த இந்தப் படம் நாளை வெளியாகாதது எல்லோருக்கும் ஏமாற்றமே. இந்நிலையில் வெளியீடு எப்போது என்பது குறித்து படத்தைத் தயாரித்திருக்கும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அந்த அறிவிப்பு கீழே…
Read Moreதனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து… “அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது. வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. […]
Read Moreதனுஷின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது, தனுஷ் நடிக்கும் 39வது படத்தின் பெயர் ‘பட்டாஸ்’ எனவும், அதன் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன் கூறும்போது, “இந்த மாபெரும் கொண்டாட்ட சந்தர்ப்பத்தில் எங்கள் ‘தயாரிப்பு எண் 34’ன் முதல் தோற்றத்தையும் தலைப்பையும் வெளியிட முடிவு செய்தோம். ‘தனுஷ் ரசிகர்கள்’ என்று நான் கூறுவது, அவரை எப்போதும் கொண்டாடும் தீவிரமான ரசிகர்களை மட்டுமல்ல, சர்வதேச தளங்களுக்கும் அவரது ரசிகர் பட்டாளம் நீண்டுள்ளது பற்றி. படத்தின் […]
Read Moreசத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 34 வது படத்தை துரை செந்தில்குமார் இயக்குவது தெரிந்த் விஷயம். நடிகர் தனுஷ் கதாநாயகனாக அவருடன் சினேகா, நவீன் சந்திரா நடிக்கும் அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றுவந்தது . இப்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு விவேக் -மெர்வின் இசையமைக்கிறார்கள். இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறதாம். […]
Read More