July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • கனடாவின் ஃபான்டேஸியா திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ்
June 2, 2019

கனடாவின் ஃபான்டேஸியா திரைப்பட விழாவில் சூப்பர் டீலக்ஸ்

By 0 706 Views
சமீபத்தில் வெளியான படங்களில் மிகப் பெரிய அளவில் பாராட்டப்பட்ட தியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெறும் பெருமதிப்புக்குரிய ஃபான்டேஸியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது.
 
Super Deluxe at Fantasia International Film Festival Poster

Super Deluxe at Fantasia International Film Festival Poster

கனடாவின் மான்ட்ரியல் நகரில் எதிர்வரும் ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரையில் நடைபெறும் இவ்விழா,  ‘வட அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் பன்முகப்பட்ட வகையான திரைப்படங்களை திரையிடும் பெரு விழா’  என சிறப்பு பெயர் பெற்றது.   

 
இத்திரைப்பட விழாவில் ‘லியம் ஹெம்ஸ்வர்த்’தின் ‘கில்லர்மேன்’ மற்றும் ‘ரிச்சர்ட் ட்ரேஃபஸ்’ஸின் ‘பாய்க்நன்ட் அஸ்ரோநாட்’ ஆகிய திரைப்படங்களும் தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.