October 10, 2024
  • October 10, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • தினக்கூலி தொழிலாளிகளுக்கு உதவ ஸ்ரேயாவின் புதிய முயற்சி – டான்ஸ் வீடியோ இணைப்பு
May 3, 2020

தினக்கூலி தொழிலாளிகளுக்கு உதவ ஸ்ரேயாவின் புதிய முயற்சி – டான்ஸ் வீடியோ இணைப்பு

By 0 684 Views

கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவழுதும் 3 ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இருந்தபோதும் தொடர் ஊரடங்கால் தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர் கள் உள்ளிட்டோருக்கு உதவுவதற்காக தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியிருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் நடிகை ஸ்ரேயா அறிவித்திருக்கிரார்.

அதில் தன்னுடன் நடனம், யோகா போன்றவற்றை மேற்கொள்ள விரும்புவர்கள், தான் அறிவித்திருக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.200 நன்கொடை அளிக்க வேண்டும். அதன் ரசீதை மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.

நன்கொடை அளித்தவர்களில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 2 நபர்கள் தன்னுடன் நேரலையில் பங்கேற்கலாம் என்று ஸ்ரேயா சொல்லி இருக்கிரார்.

வெறும் செய்தியைப் படித்துவிட்டு பொகாமலிருக்க கூடவே அவர் கணவர் எடுதது வெளியிட்டிருக்கும் ஸ்ரேயா டான்ஸ் வீடியோ…