September 15, 2025
  • September 15, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரனுக்காக சிவகார்த்திகேயன் டான் ஆகிறார்
January 27, 2021

லைகா புரடக்‌சன்ஸ் சுபாஸ்கரனுக்காக சிவகார்த்திகேயன் டான் ஆகிறார்

By 0 573 Views

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டாக்டர் மற்றும் அயலான் திரைப்படங்கள் விநியோக தளத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் அடுத்த அதிரடியான அறிவிப்பாக, சிவகார்த்திகேயனின் 19 வது படமாக “டான்” படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லியிடம் “மெர்சல், பிகில்” படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய, சிபி சக்கரவர்த்தி இப்படத்தினை இயக்குகிறார்.

லைகா புரடக்‌சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா, சிவகார்த்திகேயன் புரடக்‌சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்.

லைகா குழும தலைவர், தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அல்லிராஜா அவர்கள் கூறியதாவது…

தமிழின் மிக முக்கிய நடிகர், பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாயகனான, சிவகார்த்கிகேயனுடன் இணைந்தது, மிகப்பெரும் மகிழ்ச்சி. 

ஒவ்வொரு படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னை அடுத்த உயரத்திற்கு உயர்த்திற்கொள்ள, உழைக்கும் உழைப்பு, அர்ப்பணிப்பு அபாரமானது.

“டான்” எங்கள் இருவருக்கும் மிக முக்கியமானதொரு படமாக இருக்கும். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தின் கதையை கூறியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. கதையில் பல காட்சிகளில் நகைச்சுவை மிளிர்ந்ததை உணர்ந்தேன். இப்படத்தில் ரசிகர்கள் 100 சதவீதம் உற்சாகமான காமெடி கலாட்டாவான அனுபவத்தை பெற்று மகிழ்வார்கள் என்பது உறுதி.

இப்படத்தில் பணியாற்ற முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனை பற்றிய அறிவிப்புகள் மிக விரைவில் அறிவிக்கப்படும்.