August 2, 2026
  • August 2, 2026

Simple

தம்பி யில் அண்ணியுடன் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறேன் – கார்த்தி

by on December 15, 2019 0

கார்த்தி, ஜோதிகா நடிக்கும் ‘தம்பி’ ஜீத்து ஜோசப் இயக்கத்தில் அமைவதால் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாக இருக்கும் நிலையில் கார்த்தி படம் குறித்து பேசினார். அதிலிருந்து… “ஜீத்து ஜோசப் சார் இயக்கம் என்றதும் சிறப்பாகத் தோன்றியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும். அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியும் உறுதியாக இருக்கும். இது குடும்ப கதையை மையப்படுத்தியது என்பதால், […]

Read More

ஜிவி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்

by on December 15, 2019 0

புதிதாக தயாராகியுள்ள ‘வணிகன்’ என்ற படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி அப்படம் மீதான நம்பிக்கையை கூட்டி இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா. FEATURED PRODUCTIONS என்ற பட நிறுவனம் சார்பில் செந்தில் விஜயகுமார் தயாரிப்பில் டேனியல் VP எழுதி இயக்கியுள்ள படம் ‘வணிகன்’.  நேரம், பிரேமம், வெற்றிவேல் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஆனந்த் நாக் கதாநாயகனாக  நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் நக்ஷத்திரா நாகேஷ் இந்த படத்தின் மூலம் […]

Read More

சாம்பியன் திரைப்பட விமர்சனம்

by on December 14, 2019 0

வடசென்னைக் கதைகள் என்றாலே கால்பந்து விளையாடுவதும், வன்முறைக் களத்தில் ஈடுபடுவதும்தான் என்ற இலக்கணம்தான் தமிழ் சினிமாவில் எடுத்தாளப்படுகிறது. இதிலும் அதேதான் என்றாலும் இளைஞர்களின் கால்பந்தாட்டக் கனவையும், வன்முறைக் களத்தையும் உள்ளது உள்ளபடி நடப்பது நடந்தபடி காட்டியிருப்பதுடன் இன்றைய தலைமுறை அந்த அடையாளங்களிலிருந்து மீண்டு சாதிக்க விரும்புவதைக் காட்டியிருக்கிறார் தமிழில் அதிக பட்ச விளையாட்டுப் படங்கள் எடுத்த இயக்குநர் சுசீந்திரன்..  இதில் ‘சாம்பியன்’ என்ற தலைப்புக்கு அவர் சொல்ல வரும் பொருளே வேறு. அடுத்த வேளைச் சோற்றுக்கும், அடுத்து […]

Read More

காளிதாஸ் திரைப்பட விமர்சனம்

by on December 14, 2019 0 In திரைப்படம்

வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் விதவிதமான ஆபத்துகளை எதிர்கொள்கிறார்கள் என்றால் வீட்டிலிருக்கும் பெண்களும் நிறைய ஆபத்துகளை எதிர்கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. அப்படி யாரும் யூகித்திராத ஒரு முக்கியமான ஆபத்தைச் சொல்லி நம்மை சீட்டின் நுனியில் கட்டிப் போடுகிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ செந்தில். சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சுற்றி நடக்கும் கதை. நான்கு பெண்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறக்க, அதைத் துப்பறியும் காவல் ஆய்வாளரான பரத்தும், அவரது மேலதிகாரியான சுரேஷ் மேனனும் எதிர்கொள்ளும் மர்மங்களும், ஆச்சரியங்களும்தான் கதை. தலைப்பின் […]

Read More