May 3, 2024
  • May 3, 2024
Breaking News
  • Home
  • கல்வி
  • வர்த்தகம்
  • ஆர் கே ஸ்வாமி லிமிடெட் – இன் ஆரம்ப பொது வழங்கல் மார்ச் 4, 2024 அன்று திறக்கப்படும்
March 2, 2024

ஆர் கே ஸ்வாமி லிமிடெட் – இன் ஆரம்ப பொது வழங்கல் மார்ச் 4, 2024 அன்று திறக்கப்படும்

By 0 86 Views

• தலா ₹ 5 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 270 முதல் ₹ 288 வரை விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது (“ஈக்விட்டி ஷேர்”);

• ஏலம்/வழங்கல் மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டு மார்ச் 6, 2024 புதன்கிழமை அன்று முடிவடையும். ஆங்கர் முதலீட்டாளர் ஏலத் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2024;

• குறைந்த பட்சம் 50 ஈக்விட்டி பங்குகளுக்கும், அதன்பின் 50 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளுக்கும் ஏலம் எடுக்கலாம்;

சென்னை, மார்ச் 01, 2024: ஆர் கே ஸ்வாமி லிமிடெட் (the “Company”or the“Issuer”), மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று ரொக்கத்திற்கு தலா ₹ 5 (“ஈக்விட்டி பங்குகள்”) முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 270 முதல் ₹ 288 வரையிலான ஒரு விலை வரம்பில் (ஒரு பங்கு பிரீமியம் உட்பட) (“வழங்கல் விலை”) (“வழங்கல் “) ஒரு ஆரம்ப பொது வழங்கலை (“IPO”) திறக்க முன்மொழிகிறது.

ஏலங்கள் குறைந்தபட்சம் 50 ஈக்விட்டி பங்குகள் மற்றும் 50 ஈக்விட்டி பங்குகளின் மடங்குகளில் செய்யப்படலாம். ஆங்கர் முதலீட்டாளர் ஏலத் தேதி வெள்ளிக்கிழமை, மார்ச் 1, 2024. ஏலம்/வழங்கல் சந்தாவுக்காக மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டு, மார்ச் 6, 2024 புதன்கிழமையுடன் முடிவடையும். (“ஏலம் / வழங்கல் காலம்”)

இந்த வழங்கலானது மொத்தமாக ₹ 1,730 மில்லியன் (“புதிய வெளியீடு”) வரையிலான ஒரு புதிய ஈக்விட்டி பங்குகளின் வெளியீடு மற்றும் சீனிவாசன் கே சுவாமியின் 1,788,093 வரையிலான ஈக்விட்டி பங்குகள்; நரசிம்மன் கிருஷ்ணசாமியின் 1,788,093 வரையிலான ஈக்விட்டி பங்குகள்; எவன்ஸ்டன் பயோணீர் ஃபண்ட் L.P. இன் 4,445,714 வரையிலான ஈக்விட்டி பங்குகள்; மற்றும் பிரேம் மார்க்கெட்டிங் வென்ச்சர்ஸ் LLP இன் 678,100 ஈக்விட்டி பங்குகள் வரை (ஒட்டுமொத்தமாக, “விற்கின்ற பங்குதாரர்கள்”) ஆகியவற்றை உள்ளடக்கி 8,700,000 ஈக்விட்டி பங்குகளின் ஒரு விற்பனைக்கான வழங்கல் (“வழங்கப்பட்ட பங்குகள்”) (“விற்பனைக்கான வழங்கல் ” மற்றும் அதனுடன் சேர்த்து புதிய வெளியீடு, “வழங்கல் “)புதிய வெளியீட்டின் நிகர வருவாய் பின்வருமாறு பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது:

நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனத் தேவைகள் ரூ. 540.00 மில்லியன்; டிஜிட்டல் வீடியோ உள்ளடக்க தயாரிப்பு ஸ்டுடியோவை (“DVCP ஸ்டுடியோ”) அமைப்பதற்காக நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் நிதி மூலதனச் செலவு ரூ. 109.85 மில்லியன்; நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான நிதி முதலீடு, மற்றும் அதன் பொருள் துணை நிறுவனங்களான ஹன்சா ரிசர்ச் குரூப் பிரைவேட் லிமிடெட் (“ஹன்சா ரிசர்ச்”) மற்றும் ஹன்சா கஸ்டமர் ஈக்விட்டி பிரைவேட் லிமிடெட் (“ஹன்சா கஸ்டமர் ஈக்விட்டி”) ஆகியவற்றின் முதலீடு ரூ. 333.42 மில்லியன்; மற்றும் நிறுவனத்தின் புதிய வாடிக்கையாளர் அனுபவ மையங்கள் (“CEC”) மற்றும் கணினி உதவி தொலைபேசி நேர்காணல் மையங்கள் (“CATI”) அமைக்க நிதி ரூ. 217.36 மில்லியன்; மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக நிதியளித்தல்.

இந்தச் வழங்கலானது தகுதியான ஊழியர்களால் (“பணியாளர் முன்பதிவுப் பகுதி”) சந்தா பெறுவதற்காக மொத்தமாக ₹ 75 மில்லியன் வரையிலான ஈக்விட்டி பங்குகளின் முன்பதிவை உள்ளடக்கியது. இந்த “வழங்கலில்” பணியாளர் முன்பதிவு பகுதி தவிர்த்து இனி “நெட் ஆஃபர்” “நிகர வழங்கல்” என்று குறிப்பிடப்படுகிறது.
இந்த நிறுவனம் புக் ரன்னிங் லீட் மேனேஜர்களுடன் (“BRLMs”) கலந்தாலோசித்து, ஊழியர் முன்பதிவுப் பகுதியில் (“பணியாளர் தள்ளுபடி”) ஏலம் எடுக்கும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு, வழங்கல் விலையில் ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹27 தள்ளுபடியை வழங்கியுள்ளது.

SEBI ICDR ஒழுங்குமுறைகளின் 31வது விதியுடன் படிக்கப்பட்ட, திருத்தப்பட்ட (“SCRR”) 1957 ஆம் ஆண்டின் பத்திர ஒப்பந்தங்கள் (ஒழுங்குமுறை) விதிகளின் விதி 19(2)(b) இன் அடிப்படையில் இந்த வழங்கல் வழங்கப்படுகிறது. SEBI ICDR விதிமுறைகளின் விதிமுறை 6(2) இன் படி புத்தக உருவாக்க செயல்முறை மூலம் இந்த வழங்கல் வழங்கப்படுகிறது,

இதில் 75% க்கும் குறைவான நிகர வழங்கலானது தகுதிவாய்ந்த நிறுவன வாங்குபவர்களுக்கு (“QIBs”) ஒரு விகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்படும். (“QIB பகுதி”), இருப்பினும் நிறுவனம் மற்றும் விற்பனை செய்யும் பங்குதாரர்கள் BRLMகளுடன் கலந்தாலோசித்து QIB பகுதியின் 60% வரை ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கலாம் மற்றும் அத்தகைய ஒதுக்கீட்டின் அடிப்படையானது செபி ICDR விதிமுறைகளின்படி (“ஆங்கர் முதலீட்டாளர் பகுதி”) BRLM களுடன் கலந்தாலோசித்து விருப்பத்தின் அடிப்படையில் இருக்கும், இதில் மூன்றில் ஒரு பங்கு, ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் விலைக்கு அல்லது அதற்கு மேல் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து பெறப்படும் செல்லுபடியாகும்.

ஏலங்களுக்கு உட்பட்டு (“ஆங்கர் முதலீட்டாளர் ஒதுக்கீடு விலை”) உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு ஒதுக்கப்படும். ஆங்கர் முதலீட்டாளர் பகுதியில் குறைவான சந்தா அல்லது ஒதுக்கீடு செய்யப்படாவிட்டால், மீதமுள்ள ஈக்விட்டி பங்குகள் QIB பகுதியில் (ஆங்கர் முதலீட்டாளர் பகுதியைத் தவிர) (“நிகர QIB பகுதி”) சேர்க்கப்படும். மேலும், நிகர QIB பகுதியின் 5% மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு மட்டுமே விகிதாச்சார அடிப்படையில் ஒதுக்கப்படும்,

மேலும் நிகர QIB பகுதியின் எஞ்சிய பகுதியானது , வழங்கல் விலையில் அல்லது அதற்கு மேல் பெறப்படும் செல்லுபடியாகும் ஏலங்களுக்கு உட்பட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் உட்பட அனைத்து QIB களுக்கும் (ஆங்கர் முதலீட்டாளர்களைத் தவிர) விகிதாசார அடிப்படையில் ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும். மேலும், வழங்கல் விலையில் அல்லது அதற்கு மேல் பெறப்படும் செல்லுபடியாகும் ஏலங்களுக்கு உட்பட்டு, தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்குவதற்காக மொத்தமாக ₹ 75 மில்லியன் வரையான [•] ஈக்விட்டி பங்குகள் கிடைக்கும். மேலும், நிகர வழங்கலில் அதிகபட்சமாக 15%, நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கு (“நிறுவனம் அல்லாத வகை”) ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும், அதில் மூன்றில் ஒரு பங்கு நிறுவனம் அல்லாத வகையிலான ஏலதாரர்களுக்கு ₹ 0.20 மில்லியனுக்கும் அதிகமான மற்றும் ₹ 1.00 மில்லியன் வரை விண்ணப்ப அளவுடன் ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும். மற்றும் நிறுவன அல்லாத வகையின் மூன்றில் இரண்டு பங்கு, ₹ 1.00 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்ப அளவைக்கொண்ட ஏலதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யக் கிடைக்கும் மற்றும் SEBI ICDR விதிமுறைகளுக்கு இணங்க, நிறுவனம் அல்லாத வகையின் பிரிவுகள், வழங்கல் விலையில் அல்லது அதற்கு மேல் பெறப்பட்ட செல்லுபடியாகும் ஏலங்களுக்கு உட்பட்டு, நிறுவனம் அல்லாத வகையின் இந்த இரண்டு துணைப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ்-சந்தாவை நிறுவனம் அல்லாத வகையின் மற்ற துணை வகைகளில் உள்ள ஏலதாரர்களுக்கு ஒதுக்கப்படலாம்.

இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகளின் மொத்தக் கோரிக்கை நிகர QIB பகுதியில் 5% க்கும் குறைவாக இருந்தால், மியூச்சுவல் ஃபண்ட் பகுதியில் ஒதுக்கப்படும் மீதமுள்ள ஈக்விட்டி பங்குகள், QIB களுக்கு விகிதாசார ஒதுக்கீட்டிற்காக மீதமுள்ள நிகர QIB பகுதியுடன் சேர்க்கப்படும்.

மேலும், SEBI ICDR விதிமுறைகளுக்கு இணங்க, வழங்கல் விலையில் அல்லது அதற்கு மேல் அவர்களிடமிருந்து செல்லுபடியாகும் ஏலங்கள் பெறப்படுகிறதற்கு உட்பட்டு சில்லறை தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு (“சில்லறை வகை”) நிகர வழங்கலில் அதிகபட்சமாக 10% வரை ஒதுக்கீடு செய்யக்கிடைக்கும். அனைத்து ஏலதாரர்களும் (ஆங்கர் முதலீட்டாளர்கள் தவிர) தடுக்கப்பட்ட தொகை (“ASBA”) செயல்முறை மூலம் ஆதரிக்கப்படும் விண்ணப்பத்தின் மூலம் இந்த வழங்கலில் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் , மற்றும் UPI ஏலதாரர்களின் விஷயத்தில் (UPI ஐடி (இனிமேல் வரையறுக்கப்பட்டுள்ளது) உட்பட) அந்தந்த வங்கிக் கணக்கின் விவரங்களை வழங்க வேண்டும் ( இனிமேல் வரையறுக்கப்பட்டுள்ளது) இதில் பொருந்தக்கூடிய வகையில் சுய சான்றளிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கிகளால் (“SCSBs”) அல்லது UPI மெக்கானிசத்திற்கு இணங்க, ஏலத்தொகை தடுக்கப்படும். ASBA செயல்முறையின் மூலம் ஆங்கர் முதலீட்டாளர்கள்பங்குக்கு பங்கேற்பதற்கு ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு அனுமதி இல்லை.

மேலும், ஊழியர் முன்பதிவுப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு வழங்கல் விலைக்கு அல்லது அதற்குமேல் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் ஏலங்களுக்கு உட்பட்டு ஒரு விகிதாச்சார அடிப்படையில் ஈக்விட்டி பங்குகள் ஒதுக்கப்படும்.

எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் மற்றும் மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் ஆகியவை இந்த வழங்கலின் புத்தக இயக்க முன்னணி மேலாளர்கள் (BRLMs) ஆவர்.
இங்கு பயன்படுத்தப்படும் ஆனால் வரையறுக்கப்படாத அனைத்து பெரிய எழுத்து சொற்களும் RHP இல் குறிப்பிடப்பட்டுள்ள அதே பொருளைக் கொண்டிருக்கும்.

பொறுப்பு துறப்பு:

ஆர் கே சுவாமி லிமிடெட், தேவையான ஒப்புதல்கள், சந்தை நிலைமைகள் மற்றும் பிற பரிசீலனைகளுக்கு உட்பட்டு, அதன் ஈக்விட்டி பங்குகளின் ஆரம்ப பொது வழங்கலை மேற்கொள்ள முன்மொழிகிறது மற்றும் பிப்ரவரி 26, 2024 தேதியிட்ட RHPயை RoC இல் தாக்கல் செய்துள்ளது. இந்த RHP ஆனது SEBI இன் www.sebi.gov.in என்ற இணையதளத்திலும், பங்குச் சந்தைகளின் வலைத்தளங்களிலும் அதாவது BSE லிமிடெட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆகியவற்றில் முறையே www.bseindia.com மற்றும் www.nseindia.com என்ற இணையதளங்களிலும் லும் நிறுவனத்தின் www.rkswamy.com மற்றும் BRLMகளின் இணையதளங்கள், அதாவது எஸ்பிஐ கேபிடல் மார்க்கெட்ஸ் லிமிடெட், ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் லிமிடெட் மற்றும் மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர்ஸ் லிமிடெட் முறையே www.sbicaps.com , www.iiflcap.com மற்றும் www.motilaloswalgroup.com. ஆகிய இணையதளங்களிலும் கிடைக்கிறது.

ஈக்விட்டி பங்குகளில் முதலீடு செய்வது ஒரு அதிக அளவு ஆபத்தை உள்ளடக்கியது என்பதை எந்த ஒரு சாத்தியமான முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் அத்தகைய ஆபத்து தொடர்பான விவரங்களுக்கு, RHP இன் பக்கம் 31 இல் உள்ள ‘ஆபத்து காரணிகள்’ என்ற பகுதியைப் பார்க்கவும். சாத்தியமான முதலீட்டாளர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவை எடுப்பதற்கும் செபியிடம் தாக்கல் செய்யப்பட்ட DRHP ஐ நம்பக்கூடாது, மாறாக சாத்தியமான முதலீட்டாளர்கள் ROC இல் தாக்கல் செய்யப்பட்ட RHP ஐ நம்பியிருக்க வேண்டும்.

ஈக்விட்டி பங்குகள் 1933 ஆம் ஆண்டின் யு.எஸ். செக்யூரிட்டீஸ் ஆக்ட் இன் கீழ், திருத்தப்பட்ட (“யு.எஸ். செக்யூரிட்டீஸ் ஆக்ட்”) அல்லது யுனைடெட் ஸ்டேட்ஸில் உள்ள ஏதேனும் மாநிலப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படவில்லை மற்றும் பதிவு செய்யப்படாது யு.எஸ். செக்யூரிட்டீஸ் சட்டம் மற்றும் பொருந்தக்கூடிய யு.எஸ். ஸ்டேட் செக்யூரிட்டிஸ் சட்டங்களின் பதிவுத் தேவைகள் ஆகியவற்றிலிருந்து விலக்கு அல்லது அதற்கு உட்பட்ட பரிவர்த்தனையைத் தவிர, அவ்வாறு பதிவுசெய்யப்படாவிட்டால், அமெரிக்காவிற்குள் வழங்கப்படவோ விற்கப்படவோ கூடாது. அதன்படி, ஈக்விட்டி பங்குகள் அமெரிக்காவிற்கு வெளியே “ஆஃப்ஷோர் பரிவர்த்தனைகளில்” வழங்கப்படுகின்றன மற்றும் விற்கப்படுகின்றன, அவை ஒழுங்குமுறை S மற்றும் அத்தகைய சலுகைகள் மற்றும் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு அதிகார வரம்புகளின் பொருந்தக்கூடிய சட்டங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ஈக்விட்டி பங்குகளின் பொது வழங்கல் இருக்காது.