April 18, 2025
  • April 18, 2025
Breaking News
September 6, 2019

கார்ப்பரேட் கம்பெனிகளால் கதை திருட்டு நடக்கிறது

By 0 627 Views

படைப்பாளன் படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது.

விழாவில்,

 இயக்குநர் சீனு ராமசாமி பேசியதாவது,

“இந்தப் படைப்பாளன் படம் கதைத்திருட்டு சம்பந்தப்பட்ட கதை. கதை என்பது ஒருவனின் அறிவு. அதனால் அதை பாதுகாப்பாக வைக்க வேண்டியது நமது கடமை.

இடம் பொருள் ஏவல் என்று ஒரு படம் எடுத்தேன். அக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னார். அந்தக்கதைக்கு நான் தயாரிப்பாளரிடம் அழைத்துச் சென்று பத்துலட்சம் ரூபாய் வாங்கிக்கொடுத்தேன். ஏன் என்றால் கதை என்பது அவ்வளவு முக்கியம். இந்த வாழ்வை மிக மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்பவன் தான் படைப்பாளி..!” என்றார்.

இயக்குநர் பிரபுராஜா பேசியதாவது,.

“இங்கு கதைத்திருட்டு இல்லை என்று சில ஜாம்பவான்கள் சொல்கிறார்கள். அதெல்லாம் சும்மா. இந்தப்படத்தை தயாரிக்க ஆறுமுகம் என்பவர் முன்வந்தார். திடீரென அவர் கதைய ரெடி பண்ண நீங்கள் தான் பணம் கொண்டுவரவேண்டும் என்றார். ஆனால் அவர் இடையில் ஓடிவிட்டார்.

சில பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனி காரர்கள் யாருமே கதை கேட்க மாட்டார்கள். அங்குள்ள இடைத்தரகர்கள் கதை கேட்டு முடிவு செய்கிறார்கள். அதில் நிறைய திருட்டு நடக்கிறது. ஒரு பெரிய இயக்குநர் உதவி இயக்குநரின் கதையை எடுக்கும் போது அவங்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கணும். இந்தப்படத்தில் பல உண்மைகளை சொல்லி இருக்கிறோம்..!” என்றார்

எஸ்.திருநாவுக்கரசர் பேசியதாவது,

“சில படங்களில் நான் தயாரிக்க நடிக்க என்று இருந்தேன். திரைக்கதையும் எழுதியுமிருக்கிறேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சில நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அவருக்கும் எனக்கும் பிரச்சனை என்பதால் யாரும் நடிக்க வரவில்லை.

இந்தப்படத்தின் இயக்குநர் தம்பி பிரபுராஜா மிகவும் துடிப்பான இளைஞன். அவரை எனக்கு லயோலா காலேஜில் படிக்கும் போதே தெரியும். அவரை எப்போது பார்த்தாலும் ஊக்கப்படுத்துவேன். மிகவும் மன உறுதியோடு செயல்படக்கூடியவர். இந்தப்படத்தை முழுமையாக பிரபுராஜா முடித்து விட்டார் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு கதை தான் முதல் முக்கியம். கதை தான் ஹீரோ. நடிகர்கள் எல்லாம் இரண்டாவது தான். எம்.ஜி.ஆருக்கு கூட தோற்ற படங்கள் உண்டு. ஆக கதை தான் எப்பவும் முக்கியம். அதேபோல் அடுத்தடுத்த காட்சிகள் பெரிய சுவாரசியத்தை தர வேண்டும்.

பிரபுராஜா உதவி இயக்குநராக ரொம்ப கஷ்டப்பட்டவர். நிறையபேரிடம் கதைகளைச் சொல்லியும் இருக்கிறார். அதனால் அவரது அனுபவம் தான் இந்தப்படம். உண்மையிலே உதவி இயக்குநர்களின் வாழ்வு மிகவும் கடினமானது தான்.  பலபேர் உதவி இயக்குநர்களாகவே வாழ்க்கையை முடித்திருக்கிறார்கள். ஆனால் பிரபுராஜா மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறார்.

கதையின் கருவும் ரொம்ப சிறப்பாக இருக்கு. அது கரண்ட்ல இருக்குற விசயம் என்பதால் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்.  சிலபேருக்குத் தான் கேமரா லுக் அமையும். பிரபுராஜாவுக்கு அது நல்லா அமைஞ்சிருக்கு. பெரிய பந்தா எதுவும் இல்லாமல் இயல்பா நடிச்சிருக்கார். ஆக எல்லா வகையிலும் படம் நல்லா வரும். இப்ப சினிமா ரொம்ப கஷ்டத்துல இருக்கு. ஏன் இந்தியாவே ரொம்ப கஷ்டத்துல தான் இருக்கு. சினிமா என்பதே பிரசவ வலி மாதிரி தான்.

பெரிய நடிகர்கள் பெரிய இயக்குநர்கள் எல்லாம் சம்பளத்தை குறைக்க வேண்டும். சம்பளங்களை குறைச்சா சினிமா இன்னும் சுகாதரமா இருக்கும். ஹெல்த்தியா இருக்கும்..!” என்றார்.