January 21, 2025
  • January 21, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • 37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்
January 24, 2019

37 சர்வதேச பட விழாக்களில் தேர்வாகி 12 விருதுகளைப் பெற்ற ஒற்றைப் பனைமரம்

By 0 969 Views

‘நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்ட ஆர் எஸ் எஸ் எஸ் பிக்சர்ஸ் உரிமையாளர் எஸ்.தணிகைவேல் இப்போது ‘ஒற்றைப் பனை மரம்’ என்ற புதிய படத்தை தயாரித்து வெளியிட இருக்கிறார்.

ஈழத்தில் போர் முடிவுறும் இறுதிநாட்களில் ஆரம்பிக்கும் இப்படம், சமகால சூழலில் முன்னாள் போராளிகளும் மக்களும் எதிர்கொள்ளும் நிலையைக் கருவாக வைத்து உருவாகி இருக்கிறதாம்.

Producer S.Thanigaivel

Producer S.Thanigaivel

யதார்த்த நடிப்பு, இயல்பான காட்சியமைப்பு, இதயத்தை கனத்துப்போக வைக்கும் திருப்பங்கள் என கதைக்குள் அழைத்துச் சென்று, படம் பார்ப்பவர்களை ஈழத்தில் கிளிநொச்சியிலுள்ள கிராமத்தில் வாழ வைத்து வதைத்து விடும் அளவிற்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்களாம்.

இப்படத்தை தயாரித்தது குறித்து எஸ்.தணிகைவேல் கூறும்போது, ‘ஒற்றைப் பனை மரம்’ திரைப்படத்தை தயாரித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை இப்படம் கண்டிப்பாக கொடுக்கும். நான் தயாரித்ததில் கிடைத்த மகிழ்ச்சி, நீங்கள் பார்க்கும் போது உங்களுக்கு புரியும்..!” என்றார்.

Puthiyavan Rasiah & Navaa yugha

Puthiyavan Rasiah & Navaa yugha

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அஷ்வமித்ரா இசை அமைத்திருக்கிறார். தமிழ் பாரம்பரிய வாத்தியங்களை மட்டுமே வைத்து ஈதில் இசையமைத்திருக்கிறாராம் அவர்.

சிறந்த இயக்குனர் விருது பெற்ற ‘மண்’ பட இயக்குனர் புதியவன் ராசையா இயக்கத்தையும், தேசிய விருது பெற்ற ‘சுரேஷ் அர்ஸ்’ படத்தொகுப்பையும், சர்வதேச விருது பெற்ற இலங்கை ஒளிப்பதிவாளர் ‘மகிந்த அபேசிங்க’ ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ள படத்தில் முக்கிய பாத்திரங்களாக புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி , மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இப்படம் 37 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 12 விருதுகளையும் குவித்திருப்பது பெருமையான விஷயம்.

எங்களுக்கும் விரைவில் திரையிடுங்கள் தணிகைவேல் சார்..!