June 6, 2023
  • June 6, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நமீதாவை ஐட்டம் என்ற நபர் – கிழித்துத் தொங்கவிட்ட நமீதா
March 17, 2020

நமீதாவை ஐட்டம் என்ற நபர் – கிழித்துத் தொங்கவிட்ட நமீதா

By 0 523 Views
நடிகை நமீதாவிற்கு ரசிகர் ஒருவர் “ஹை… ஐட்டம்…” என்று ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
 
அந்த ரசிகரின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ” இவன் பெயர் தமிழ் செந்தமிழ். என்ற இவன் என்னுடைய இன்ஸ்டாகிராமில் “ஹாய் ஐட்டம்…” என்று மெசேஜ் செய்திருந்தான். கேட்டதற்கு தன்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்றும் கூறினான். அதன் பின் என்னுடைய ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் கூறினான்.
 
இதனால் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறிவிட்டேன். நான் மீடியாவில் இருப்பதால் இப்படி கேட்டானா? இல்லை நான் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிப்பதால் இருப்பதால் கேட்டானா? 
 
முதலில் இவனைப் போன்றவர்கள் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். என் அமைதியை பலவீனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உன் அம்மாவை இப்படி ஒருவன் அவமானப்படுத்தினால் தாங்க முடியுமா..? நவராத்திரியில் 9 நாள் துர்காவை வணங்குவதை விட மகளிர் தினம் கொண்டாடுவதை விட நிஜ வாழ்வில் ஒரு பெண்ணை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக்கொள்ளட்டும்..!” என்று அவனை கிழித்தெடுத்து தொங்கவிட்டார்.
 
நமீதாவை வம்புக்கிழுத்த நபர் இவர்தான்…
Namitha Instagram

Namitha Instagram