மலையாளத்தில் வெளிவந்து பெரு வெற்றி பெற்றதுடன் இந்தியாவெங்கும் கவனிக்கப்பட்ட படம் அய்யப்பனும் கோஷியும்.
பிரித்விராஜ் மற்றும் பிஜு மேனன் இணைந்து நடித்த அந்தப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்தப்படத்தின இயக்குனர் சச்சிதானந்தன் என்கிற சச்சி.
அவருக்கு சமீபத்தில் கேரளாவில் இடுப்பு மூட்டில் அறுவை சிகிச்சை நடந்தது. அதைத் தொடர்ந்த சிகிச்சையில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அந்த மருத்துவ மனையில் இருந்து திருச்சூரில் உள்ள ஜுபிலி மிஷன் மருத்துவ மனைக்கு மாற்றி இருக்கிறார்கள்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வரும் அவர் நிலைமை 48 முதல் 72 மணி நேரங்கள் கழித்து தான் தெரியவரும் என்று மருத்துவமனையிலிருந்து வெளியிடப்பட்டுள்ள மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கேள்விப்பட்டு கேரள திரையுலகமும் மலையாள ரசிகர்களும் மிகுந்த கவலைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
Medical Report of Director Sachi