September 23, 2023
  • September 23, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது
October 23, 2020

இறந்த கணவரின் படத்தை வைத்து வளைகாப்பு நடத்திய நடிகை மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்தது

By 0 479 Views

நடிகர் அர்ஜுனின் சகோதரி மகனும், பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா சில மாதங்களுக்கு முன் திடீர் மரணம் அடைந்ததும், அப்போது அவரது மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தும் தெரிந்த விஷயங்கள்.

இந்நிலையில் மேக்னா ராஜ்க்கு கடந்த மாதம் வளைகாப்பு நடத்தப் பட்டது. அப்போது அவரது கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட்டவுட்டை நிற்க வைத்து அதன் முன்னிலையில் வளைகாப்பை நடத்தினார்கள்.

Actress Meghna Raj

Actress Meghna Raj

இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் மனம் நெகிழ்ந்து போனார்கள். இப்போது மேக்னாராஜ்க்கு ஆண்குழந்தை பிறந்து இருக்கிறது.

இப்போதும் சிரஞ்சீவி சார்ஜாவின் படத்தை வைத்து அவரது குழந்தையைக் காட்டி மகிழ்ந்தார்கள் குடும்பத்தினர். 

நாமும் வாழ்த்தலாம்..!