January 15, 2025
  • January 15, 2025
Breaking News
December 4, 2024

ரஜினியின் வாழ்த்துடன் அவரது பிறந்த தினத்தில் வெளியாகும் ‘மழையில் நனைகிறேன்..!’

By 0 76 Views

இதுவரை எந்தத் திரைப்படத்திறகும் கிடைக்காத பப்ளிசிட்டி அறிமுக நாயகன் அன்சன் பால் நடிக்க, டி.சுரேஷ்குமார் இயக்குனராக அறிமுகமாகும் மழையில் நனைகிறேன் படத்துக்கு கிடைத்திருக்கிறது. 

அப்படி என்ன பப்ளிசிட்டி என்கிறீர்களா..? 

முதல் மறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “இந்தப் படம் மிகப்பெரிய  வெற்றி பெற வேண்டும் என்று மழையில் நனைகிறேன்..!” படத்தை வாயார வாழ்த்தியிருக்கிறார்.

இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வெஞ்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் தயாரிக்கிறார். இதில் அன்சன் பால் ஜோடியாக ரெபா மோனிகா ஜான் நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் சங்கர் குரு ராஜா, மேத்யூ வர்கீஸ், அனுபமா குமார், சுஜாதா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். 

விஜி மற்றும் கவின் பாண்டியன் வசனம் எழுதியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். கல்யாண் ஒளிப்பதிவு செய்ய, ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் வாயால் வாழ்த்து பெற்றிருக்கும் இந்த படம் அவரது பிறந்த தினமான டிசம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இன்னொரு சிறப்பு அம்சம். 

இதெல்லாம் சாத்தியமானது இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார் தீவிர ரஜினிகாந்த் ரசிகர் என்பதால்தான். 

ரஜினிகாந்தின் தீவிர ரசிகராக இருக்கும் இவரைப் பற்றி ரஜினிகாந்திடம் நண்பர் ஒருவர் சொல்ல, உடனே அவர் தயாரித்திருக்கும் ‘மழையில் நனைகிறேன்’ படத்திற்கு வாழ்த்துக் கூறியதோடு, அந்த வீடியோவை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கி இருக்கிறார் ரஜினி. 

மேலும் தயாரிப்பாளர் பி.ராஜேஷ் குமார் படம் குறித்து கூறுகையில், “இயக்குநர் சுரேஷ் என் தம்பியுடன் படித்தவர் என்பதால் அவர் என்னிடம் கதை சொன்னார். நானும் அவருக்காக சில தயாரிப்பாளர்களை அணுகினேன். ஆனால் அவர்களால் அந்த நேரத்தில் படம் தயாரிக்க முடியாமல் போனது. 

நானே தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்த பது இதற்கான முழு பணமும் என் கையில் இருந்தால் மட்டுமே தயாரிப்பது என்ற முடிவில் இருந்ததால் இவரை காத்திருக்க சொன்னேன் பிறகு என்னிடம் பணம் வந்ததும் இந்த படத்தை தயாரிக்க ஆரம்பித்தேன்..!

ரஜினி சார் என் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டிருப்பதைக் கடவுளின் ஆசி என்பேன்..!” என்றார்.

படம் உருவானது குறித்து இயக்குநர் டி.சுரேஷ் குமார் கூறியதிலிருந்து…

“காதல் தான் படத்தின் அடிநாதன் என்றாலும் இதில் காதலுக்கு என்ன பிரச்சனை வருகிறது என்பது புது விஷயமாக இருக்கும். நாயகியை நாயகன் ஒருதலையாகக் காதலிக்கிறார். அமெரிக்காவுக்கு சென்று மேல் படிப்பு படிக்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கும் நாயகி காதலை நிராகரித்து விடுகிறார்.

அதற்காக அவரை நாயகன் தொந்தரவு செய்யாமல் என் மேல் உனக்கு ஒரு நாள் காதல் வரும் என்று கூறிவிட்டு விலகி விடுகிறார். அது நிறைவேறியதா..? என்பது தான் கதை.

இது முழுக்க காதல் படமாக இருந்தாலும் குடும்பத்துடன் உட்கார்ந்து இந்த படத்தை பார்க்க முடியும் என்கிற அளவில் தான் நாகரீகமான காதலை சொல்லி இருக்கிறேன்..!”

“ரெமோ’ படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானேன். இந்தப் படம் தான் என்னை முழு ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறது. என் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை முழுமையாக செய்து இரக்கிறேன்… ரசிகர்கள் நிச்சயம் இந்த படத்துக்கு வரவேற்பு கொடுப்பார்கள்..!” என்றார் நாயகன் அன்சன் பால்.

“மலையாள படத்தில் அறிமுகமாகி நிறைய தெலுங்கு படங்களிலும் நான்கு தமிழ் படங்களிலும் நடித்திருக்கும் எனக்கு இந்த படம் ஒரு அழகான காதல் கதையாக அமைந்திருக்கிறது. படத்தின் பாடல்கள்  சிறப்பாக அமைந்திருக்கின்றன. அதனால் ரசித்து நடிக்க முடிந்தது..!” என்றார்.

தமிழகத்தில் மழை முடிந்த நிலையில் மீண்டும் காதல் மழையில் ரசிகர்களை நனைக்க வருகிறது ‘மழையில் நனைகிறேன்..!’