July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • நெய்வேலி மாஸ்டர் விஜய் ஷூட்டிங் கூட்டத்தில் தடியடி
February 8, 2020

நெய்வேலி மாஸ்டர் விஜய் ஷூட்டிங் கூட்டத்தில் தடியடி

By 0 559 Views

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிதது வரும் மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் நடந்து வருவது தெரிந்த விஷயம்.

அங்கே சூட்டிங் நடக்கும் லொகேஷன் பற்றிய தகவல் முதலில் யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளமாக என்எல்சி சுரங்கத்தில் நுழைந்து நடிகர் விஜயை அள்ளிக் கொண்டு போனதால் தகவல் காட்டுத்தீயாக பரவி விட்டது.

அதனால் நேற்றே தங்கள் தலைவன் விஜய்யை காணவேண்டும் என்ற ஆவலில் ரசிகர்கள் என்எல்சி பகுதியில் குவிந்தனர். அதே நேரத்தில் பாஜகவினர் படப் பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து  கூடியதால் பெரும் பரபரப்பு உருவானது. மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினார்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க…இன்றைக்கு பிற்பகலில் இருந்து ரசிகர்கள், குடும்பத்துடன்   விஜய்யை காண குவிந்தார்கள். விஜய்யை காண ஏராளமான பெண்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால் கூட்டத்தினரை லேசான தடியடி நடத்தி போலீசாரும் அதிரடிப்படையினரும் விரட்டினர். இந்த திடீர் நடவடிக்கையால் ரசிகர்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர்.

அதனால் அப்பகுதியே திடீரென பதற்ற பூமியாக மாறி போனது. தொடர்ந்து 2வது நாளாக தடியடி நடத்தியதால் போலீசார் மீது விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.