March 29, 2024
  • March 29, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • காவல் துறையின் வேறொரு முகத்தை காட்டும் காவல்துறை உங்கள் நண்பன்
March 12, 2020

காவல் துறையின் வேறொரு முகத்தை காட்டும் காவல்துறை உங்கள் நண்பன்

By 0 495 Views
தயாரிப்பாளர்கள் B. பாஸ்கரன், P. ராஜா பாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி BR Talkies Corporation சார்பில் White Moon Talkies நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இயக்குநர் RDM இயக்கியுள்ள படம் “காவல்துறை உங்கள் நண்பன்” நிஜத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, சமூக அக்கறையுடன் அழுத்தமாக கூறும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
 

Creative Entertainers நிறுவனம் சார்பில் G.தனஞ்செயன் இப்படத்தை விநியோகம் செய்கிறார். இப்படத்தின் இசை விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்  தயாரிப்பாளர் T. சிவா பேசியது …

தற்போது திரையுலகம் பலமுனைகளிலும் இருந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. சினிமா டிக்கெட் மீது ஏற்கனவே அதிகப்படியான வரிவிதிப்பு இருக்கும் நிலையில், மத்திய அரசு மேலும் 8 சதவீத TDS வரி விதித்துள்ளது.

 
நாங்கள் இப்போது மத்திய அரசிடம் இதனை  முறையிட டெல்லி செல்லவுள்ளோம். 10 சதவீத படங்களில்  மட்டுமே ஒரு வருடத்தில் பெரிய அளவில் வியாபாரம் நடக்கிறது. இன்று இங்கே தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 
ஒரு நல்ல முயற்சியை கண்டுகொண்டு அதனை அடையாளப்படுத்தி மிகப்பெரிய அளவில் எடுத்து செல்கிறார். இது மற்ற தயாரிப்பாளர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கும்.
 
நாயகன் சுரேஷ் ரவி பேசியது…

நானும் இயக்குநர் RDM இருவரும் 8 வருடங்களாக இணைந்து படம் செய்ய வேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எங்கள் கனவு உண்மையாகியுள்ளது. எங்கள் படத்தை முன்வந்து வாங்கியதற்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. அவர் வெளியிட்ட பல படங்கள் தரமான கதையுடன், நல்ல பெயர் பெற்று வெற்றியடைந்துள்ளது. அந்த வகையில் “காவல்துறை உங்கள் நண்பன்” படம் கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்றாது.
 

காவல்துறை பற்றிய நல்லவற்றை பல படங்கள் சொல்லிய நிலையில் இப்படம் அதன் வேறொரு முகத்தை காட்டும். எல்லாத்துறையிலும் நல்லதும் கெட்டதும் கலந்தே இருக்கும் இதில் நாங்கள் காவல்துறையின் காட்டப்படாத பக்கத்தை காட்டியுள்ளோம்.

 

நாயகி ரவீனா பேசியது…


என்னை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து, மிகசிறந்ததொரு கதாப்பாத்திரம் தந்ததற்கு  இயக்குநர் RDM அவர்களுக்கு நன்றி. திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெறுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
BR Talkies சார்பில் தயாரிப்பாளர் B. பாஸ்கரன் பேசியது…முதன் முதலாக இயக்குநர் RDM என்னிடம் கதை கூறியபோது எனக்கு பல இடங்களில் அதிர்ச்சியாக இருந்தது. சில ஆச்சர்யங்களும் இருந்தது. இந்தப்படம், பார்ப்பவர்களை பெரிய அள்வில் பாதிக்கும் குறிப்பாக இறுதிக்காட்சி பெரும் அதிர்வை தரும்.

நடிகர் ராம்தாஸ் பேசியது….

இயக்குநர் RDM  ஒரு மினி மணிரத்னம் எனலாம். மிகவும் தெளிவான சிந்தனையுடன், குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியாக, எந்தவித சமரசமுமின்றி படம் எடுக்க கூடியவர்.

 

தயாரிப்பாளர் தனஞ்செயன் மொத்த நிகழ்வையும் அழகாக தொகுத்து வழங்கி பேசியது…

இப்படத்தை தமிழின் மிக முக்கிய இயக்குநர்களுக்கு திரையிட்டு காட்டினோம். அனைவரும் படத்தை வெகுவாக ரசித்ததோடு இப்படத்தை தங்கள் படம் போல் கருதி விளம்பரம்படுத்த போவதாக கூறினார்கள். இப்படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும்.

சுரேஷ் ரவி, ரவீனா, மைம் கோபி, சரத் ரவி, RJ முன்னா, சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் மிக அற்புதமான நடிப்பை தந்துள்ளார்கள்.

 

ஆதித்யா, சூர்யா இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். விஷ்ணு ஶ்ரீ ஒளிப்பதிவு செய்ய, வடிவேல் மற்றும் விமல் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளனர். ராஜேஷ் கலை இயக்கம் செய்ய ஓம் பிரகாஷ் சண்டைப்பயிற்சி இயக்கம் செய்துள்ளார். வசனத்துடன் பாடல்களையும் எழுதியுள்ளார் ஞானகர்வேல்.