December 2, 2024
  • December 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • துல்கர் சல்மான் படத்தில் நாய்க்கு தலைவர் பெயர் வைத்த சர்ச்சை
April 26, 2020

துல்கர் சல்மான் படத்தில் நாய்க்கு தலைவர் பெயர் வைத்த சர்ச்சை

By 0 658 Views

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் “varane avashyamund”.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுரேஷ் கோபி மற்றும் சோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் சென்னையில் படமாக்கப்பட்டு இருந்தது.

தற்போது இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

அந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த ஒரு நிஜ லேடி ரிப்போர்ட்டரின் புகைப்படம் இடம்பெற்றதாகவும், இந்த திரைப்படத்தை பார்த்த அந்த பெண் நிருபர் தன்னுடைய அனுமதியின்றி இந்த புகைப்படத்தை பயன்படுத்தியதற்காக தயாரிப்பாளரான துல்கர் சல்மான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இது குறித்து நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தாராம்.

இதனையடுத்து துல்கர் சல்மானும் இந்த படத்தின் இயக்குனரும் இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் துல்கர் சல்மான் இந்த புகைப்படம் வெளியானதுக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதாகவும், இதற்காக அவரும், அவரது தயாரிப்பு நிறுவனமும் அந்தப் பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் இந்த புகைப்படம் எப்படி வந்தது என்று தெரியவில்லை எனவும், விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்து அந்தப் பிரச்சினையை தீர்த்திருக்கிரார்.

ஆனாலும் அப்பிரச்னை அடங்குவதற்குள் இன்னொரு சர்ச்சை தீ பறக்கிறது. அதாவது இப்படத்தில் பிரபாகரன் என்ற பெயரை ஒரு நாய்க்க்கு வைத்திருக்கிறார்களாம்.

உடனே நடிகர் மம்மூட்டி மீது தமிழர்களுக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால் அவரது மகன் தமிழினத்தின் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களை கொச்சைப்படுத்துவது ஒரு காலமும் அனுமதிக்க முடியாது.

இனி தமிழகத்தில் அவரது படம் திரையிடப்படுவது சிக்கல் ஏற்படலாம் என்று ஆரம்பித்து கெட்ட வார்த்தைகளால் ட்விட் போட்டு #Boycott_VaraneAvashyamund என்னும் ஹேஷ் டேக்கும் கிரியேட் பண்ணி சூடு பறக்க விட்டிருக்கிறார்கள்.

இதற்கு துல்கர் போட்டிருக்கும் விளக்கம்…

” வரனே அவஷ்யமுண்டு’ படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல. பழைய மலையாளப் படமான ‘பட்டண பிரவேஷம்’ படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையே என்னுடைய இயக்குநர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்.

பின் குறிப்பு : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்..!”