பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் இயக்கத்தில் தயாரிப்பாளர் இல்லாத கிரவுட் ஃபண்டிங் என்ற முறையில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் திரௌபதி.
இதில் ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் மற்றும் பலர் நடிதிருக்கிறார்கள்.
இப்படம் சமூகத்தில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் நாடக காதல் குறித்து மிகவும் எதார்த்தமான கதையுடன் களம் காண வரப் போகிறது திரௌபதி.
இந்தப்படத்தின் ட்ரைலர் ஜனவரி 3 இல் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஐந்து மணி நேரங்களில் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. சிறுமுதலீட்டு படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது இதுவே முதல் முறை.
இந்நிலையில், இந்த திரௌபதி திரைப்படத்திற்கு U\A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
ஆனாலும் இந்த திரைப்படம் வெளிவந்தால் சாதி மோதல்கள் ஏற்படும் என பல தரப்பினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.
இப்படி சலசலைப்பைக் கிளப்பினாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரசிகர்கள் திரௌபதி திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.பல இடங்களில் திருமணம், காதணி போன்ற குடும்ப நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் திரௌபதி படத்திற்கு விளம்பரம் செய்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் தாங்களாகவே முன்வந்து சுவர் எழுத்து, பெயிண்டிங் போன்ற விளம்பரங்களையும் திரௌபதி படத்திற்காக செய்துள்ளனர்.
வரும் 28ம் தேதி ரிலீஸ் ஆகப் போறப் படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் & வி.சி. தலைவர் திருமா இருவரும் பார்க்க ஒப்புக் கொண்டதாகவும் ஒரு தகவல்.
இவரகள் கொடுக்கும் சென்சார் தான் முக்கியம்..!