சென்னை, 5 ஜனவரி 2023: விநாயகா மிஷன்’ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (நிகர்நிலை பல்கலைக்கழகம்), அதன் லா ஸ்கூல்-ன் புதிய டீன் ஆக பேராசிரியர் (முனைவர்) அனந்த் பத்மநாபன் அவர்களை நியமனம் செய்திருக்கிறது.
டாக்டர், பத்மநாபன், தற்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘ஸ்லோன் ஃபெல்லோ’ என்ற பொறுப்பை வகித்து வருகிறார்.
யுஎஸ்ஏ-வில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் லா ஸ்கூல்-ன் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களை இவர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2017-ல் இந்தியாவின் பெங்களூருவில் அமைந்துள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா பல்கலைக்கழகத்தில் சட்ட இளங்கலைப் படிப்பை முடித்த பிறகு, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகள் கால அளவிற்கு தொழில் தகராறுகள் துறை சார்ந்த வழக்கறிஞராக டாக்டர். பத்மநாபன் பணியாற்றினார்.
அதன்பிறகு, பென் கேரி லா வில் ஒரு ஆண்டு கல்வித்திட்டத்தை மேற்கொள்ள அவர் முடிவுசெய்தார். 2014-ம் ஆண்டில் அதனை வெற்றிகரமாக முடித்தபிறகு எஸ்ஜேடி கல்வித்திட்டத்தில் பயில்வதற்கு ஸ்காலர்ஷிப் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் இருந்தபோதும் மற்றும் அவரது எல்எல்எம் கல்வித்திட்ட ஆண்டின்போதும் அவர் பெற்ற வியத்தகு தொழில்நுட்ப சட்ட மற்றும் கொள்கை பயிற்சியினால் குறிப்பிடத்தக்க அளவு ஊக்கம் பெற்ற டாக்டர். பத்மநாபன் புதுடெல்லியில் எண்டோமென்ட் அமைப்புடன் இணைந்து பணியாற்றினார்.
முனைவர் பட்டப்படிப்பிற்கான ஆய்வேடு செயல்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தபிறகு டாக்டர். பத்மநாபன், ஒரு பல்கலைக்கழக பணியாற்றிய அதே வேளையில் தலைவராக கல்விசார் முழுநேர பணிக்கு தன்னை மாற்றிக்கொண்டார். அந்த பயணத்தில் அவர் பெற்ற அனுபவமும், உள்நோக்குகளும், அவரது பயணத்திற்கான இலக்குகளை சிறப்பாக தெளிவுபடுத்த அவருக்கு உதவின. அதைத் தொடர்ந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்-ல் மிட்-கேரியர் கல்வித்திட்டத்தில் சேர அவர் முடிவெடுத்தார்.
தொழில்நுட்ப கொள்கை, அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் புத்தாக்க ஸ்காலர்ஷிப் ஆகியவை டாக்டர். பத்மநாபனின் ஆராய்ச்சியில் அவர் ஆர்வம் காட்டுகிற பிரிவுகளாக இருக்கின்றன. ‘அறிவுசார் சொத்துரிமைகள்: மீறல்கள் மற்றும் தீர்வுகள்’ (லெக்சிஸ்நெக்சிஸ், 2012) என்ற சிறப்பான ஆய்வு கட்டுரையை அவர் எழுதினார் மற்றும் ‘புத்தாக்கத்தின் முன்னோடியாக இந்தியா’ (ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், 2017) என்ற முக்கியமான தொகுப்பின் இணை ஆசிரியராக பங்களிப்பை அவர் வழங்கினார்.
இந்தியாவில் ஒழுங்குமுறை விதிகள்: வடிவமைப்பு, திறன், செயல்பாடு (ஹார்ட் பப்ளிஷிங், 2019) என்பதன் மீதான ஒரு சமீபத்திய புத்தகத்தில் பிக் டேட்டா என்பது மீதான அத்தியாயத்தின் இணை ஆசிரியரான டாக்டர். பத்மநாபன், பொது சட்டம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் ஒழுங்குமுறை பரிமானங்கள் என்பதனை ஆய்வுசெய்வதற்கான ஒரு தொடர் முன்னெடுப்பின் ஒரு அங்கமாக செயலாற்றி வருகிறார்.
அரசியல் அமைப்பு சட்ட சூழலுக்குள் இந்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் மீதான அவரது புரிதலை இது வெளிப்படுத்துகிறது; இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான மறுசிந்தனை (OUP 2017) மற்றும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆக்ஸ்ஃபோர்டு கையேடு (OUP 2016) என்ற தலைப்பிலான அத்தியாயங்கள் வழியாக இதை அவர் ஆய்விற்கு உட்படுத்தியிருக்கிறார்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ், தி பிரின்ட், லைவ்மின்ட், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய பத்திரிகைகளிலும் மற்றும் பிற ஊடகங்களிலும் இவரது கருத்தை வெளிப்படுத்தும் கட்டுரை வழியாக தொழில்நுட்பத்தின் தாக்கம் மீதான விரிவான பொது உரையாடல்களில் இவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
VMRF -ன் அறுபடை வீடு இன்ஸ்டிடியூட் ஆஃப் லா (AVIL) – ன் புதிய டீனாக டாக்டர். அனந்த் பத்பமநாபன் நியமனம் செய்யப்பட்டிருப்பதை அறிவித்த VMRF ன் வேந்தர் டாக்டர். A.S. கணேசன்,
“VMRF – ன் துணைவேந்தர் மற்றும் VMRF – ன் ஒட்டுமொத்த கல்விசார் சமூகத்தின் சார்பாக லா ஸ்கூலின் புதிய டீனாக டாக்டர்.பத்மநாபன் அவர்களை வரவேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
மருத்துவ அறிவியல் மற்றும் மருத்துவ அறிவியல் சாராத பிற கல்வித்திட்டங்கள் தொடர்பான பல்வேறு தளங்களில் முன்னணி கல்வி நிறுவனமாக VMRF திறம்பட செயலாற்றி வருகிறது. சுகாதார அறிவியல் அல்லாத துறையில் சட்டப்படிப்பிற்கான லா ஸ்கூலை தொடங்க நாங்கள் எடுத்த முடிவானது, உயர்கல்வியில் நேர்த்தி நிலையை ஊக்குவிப்பதற்கான எமது தொடர் முயற்சிகளின் ஒரு அங்கமாகும்.
இதன் புதிய டீன் நியமனம் சட்டக் கல்விக்கு மேலும் வலுசேர்க்கும். NLS – பெங்களூரு; பென்சில்வேனியா பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம் போன்ற இந்தியாவிலும் மற்றும் உலகளவிலும் முதன்மை வகிக்கும் பல்கலைக்கழகங்களில் கல்வித் தகுதிகளுடன் மிகச்சிறப்பான அனுபவத்தையும் டாக்டர். பத்மநாபன் கொண்டிருக்கிறார். டாக்டர். பத்மநாபன் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை தெரிவிக்கிறோம் மற்றும் VMRF குடும்பத்திற்கு அவரை அன்புடன் வரவேற்கிறோம்.,” என்று கூறினார்.
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும் மற்றும் VMRF -ன் லா ஸ்கூலி ன் முக்கிய லோசனைக் குழுவின் தலைவருமான டாக்டர். A. ஃபிரான்சிஸ் ஜுலியன் இது தொடர்பாக கூறியதாவது:
“AVIL ன் டீனாக மிகச்சிறந்த கல்வியாளரும் சாதனைகள் படைத்திருக்கும் ஆசிரியராகவும் திகழும் ஒருவரை நியமனம் செய்வதற்கான இந்த முடிவு சட்டத்துறையில் உயர்கல்வி உலகிற்கு ஒரு வலுவான சமிக்கையை அனுப்பியிருக்கிறது. கல்வியில் உயர் நேர்த்தி நிலையை நிலைநாட்டுவதற்கும், VMRF -ம் அதன் புரவலர்களும் கொண்டிருக்கும் ஆழமான, முழுமையான பொறுப்புறுதியை இது பிரதிபலிக்கிறது. டாக்டர். பத்மநாபன் அவர்களின் திறனும், அனுபவமும் மிக்க தலைமைத்துவத்தின் கீழ், VMRF -ம், AVIL -ம் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பெறும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.”
VMRF – ன் நிர்வாக குழுவின் உறுப்பினர் திரு. J. சுரேஷ் சாமுவேல், VMRF – ல் அமைந்துள்ள லா ஸ்கூல் – ன் பரிணாம வளர்ச்சிகள் நிகழ்ந்திருக்கும் இந்த புதிய மாற்றத்தை வரவேற்று கூறியதாவது:
“உயர்கல்வி மற்றும் சட்டக்கல்விப் பிரிவில் உன்னதமான நேர்த்தி நிலையை ஊக்குவிக்க வேண்டுமென்ற இலட்சியத்தின் ஒரு பகுதியாக கல்வி நிறுவனம் சார்ந்த வழிகாட்டலுக்கு ஒரு ஒத்துழைப்பு உடன்பாட்டை ஓ.பி. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி (JGU) உடன் VMRF சமீபத்தில் மேற்கொண்டிருக்கிறது. “உயர்நிலை கல்வி நிறுவனம்” என புகழ்பெற்றிருக்கும் ஓ.பி. ன் ஆதரவின் கீழ் ஒரு ஜிண்டால் பல்கலையுடனான இந்த ஒத்துழைப்பு, சென்னையில் VMRF முன்னணி லா ஸ்கூலை உருவாக்குவதற்கான முயற்சிகளில் வழிகாட்டலையும், ஆதரவையும் சட்டக்கல்வியில் உயர்நேர்த்தியை உறுதிசெய்கின்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது.
ஊக்குவிப்பதற்காக டீனாக நியமனம் செய்யப்பட்டிருக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொண்டிருக்கிறோம். VMRF – க்கும் மற்றும் AVIL -க்கும் சிறப்பான உதவியையும், ஆதரவையும் வழங்கி வருவதற்காக ஓ.பி. ஜிண்டால் குளோபல்”யுனிவர்சிட்டியின் முதல் துணைவேந்தர் பேராசிரியர் (டாக்டர்) சி. ராஜ்குமார் மற்றும் அவரது சகாக்கள், பேராசிரியர் (டாக்டர்). எஸ்.ஜி. ஸ்ரீஜித், எக்ஸிகியூட்டிவ் டீன், ஜிண்டால் குளோபல் லா ஸ்கூல்; லா ஸ்கூலின் மாணவர் சேர்க்கைத் துறை இயக்குனர் பேராசிரியர் ஆனந்த் பிரகாஷ் மிஸ்ரா; இத்துறையின் முன்னாள் இயக்குனர் திரு. அன்குர் வோரா ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.”
JGU மற்றும் VMRF க்கு இடையே கல்வி சார்ந்த வழிகாட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது குறித்து ஓ.பி. ஜிண்டால் குளோபல் யுனிவர்சிட்டி (JGU) – ன் முதல் துணை வேந்தர் பேராசிரியர் (டாக்டர்) சி. ராஜ் குமார் கூறியதாவது:
“JGU மற்றும் VMRF – 3 க்கு இடையே உருவாக்கப்பட்டிருக்கும் சார்ந்த வழிகாட்டல் கட்டமைப்பு, ஒரு தனித்துவமான முனைப்புத்திட்டமாகும்; உயர்கல்வியில் உலகளவில் உயர்நேர்த்தியை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்திய உயர்கல்வித் துறையில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு நிகரற்ற முயற்சியாக இது இருக்கிறது. VMRF ன் வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் VMRF துணைவேந்தர் உட்பட, அவரது சகாக்களின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தலைமைத்துவ பண்பினை நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
AVIL -ன் புதிய டீனாக டாக்டர். அனந்த் பத்மநாபன் அவர்களை நியமனம் செய்வதற்கான இந்த அசாதாரண முடிவு, VMRF -ல் மிக நேர்த்தியான லா ஸ்கூல் ஐ நிறுவுவதில் இக்கல்வி குழுமம் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை வெளிப்படுத்துகிறது. பிரமிக்க வைக்கும் கல்விசார் தகுதிகள், மிகச்சிறப்பான தொழில்முறை நிபுணத்துவ அனுபவம் மற்றும் கல்வி நிறுவனத்தை தொலைநோக்கு சிந்தனையுடன் உருவாக்கும் திறன், இந்தியாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பல்வேறு முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி அமைப்புகளுடன் பணியாற்றிய அனுபவங்கள் என பல்வேறு சிறப்பு அம்சங்களோடு தனது பணியை VMRF – ல் டாக்டர். பத்மநாபன் தொடங்கவிருக்கிறார்.
இந்தியாவில் சட்டக்கல்வியை மேலும் முன்னெடுக்கும் முயற்சியில் இதன் புதிய டீனை நியமனம் செய்வதில் இதைவிட மிகச்சிறந்த தேர்வை VMRF செய்திருக்க இயலாது.”