November 22, 2024
  • November 22, 2024
Breaking News
January 4, 2021

எதிர்கால தொற்றுகள் கொரோனாவை விட மோசமாக இருக்கும் – எச்சரிக்கும் டாக்டர்

By 0 547 Views

வருங்காலத்தில் Disease X என்று அழைக்கப்படும் வைரசால் உலகம் பாதிக்கப்படலாம் என எபோலா வைரஸை கண்டுபிடித்த பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

டாக்டர், பேராசிரியர் ஜீன்-ஜாக் முயெம்பே, 1976-இல் எபோலாவைக் கண்டுபிடிக்க உதவினார். இப்போது மனிதகுலம் அறியப்படாத புதிய வைரஸ்களை எதிர்கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக் காடுகளில் இருந்து ஆபத்தான வைரஸ்கள் உருவாகின்றன என்று கூறியுள்ளார்.

எதிர்கால தொற்றுநோய்கள் COVID-19 ஐ விட மோசமாக இருக்கக்கூடும். கொரோனா வைரஸை போல வேகமாக பரவும், தவிர எபோலா வைரஸை போன்று ஆபத்தாகவும் இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிரார்.

ரொம்ப பயமுறுத்த வேண்டாம் டாக்டர்..!