January 24, 2025
  • January 24, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தியன் 2 விபத்து விசாரணை இன்று ஷங்கரையும் நடித்துக் காட்ட சொல்வார்களா
March 18, 2020

இந்தியன் 2 விபத்து விசாரணை இன்று ஷங்கரையும் நடித்துக் காட்ட சொல்வார்களா

By 0 666 Views
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக 3 பேர் இறந்தது அனைவரையும் அதி₹சியை ஏற்படுத்தியது.
 
அடிக்கடி சினிமா விபத்துகள் ஏற்பட்டு வருவதால் இந்த விபத்து ஏற்பட்டதன் காரணத்தை அறிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
ஏற்கனவே கமலஹானிடம் விசாரணை நடத்திய போலீசார், மேலும் அந்த இடத்தில் இருந்த பலரிடமும் விசாரணை நடத்தினர். தற்போது இயக்குனர் ஷங்கரை இந்த விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
 
விபத்து நடந்த இடமான தனியார் பிலிம் சிட்டியில் சங்கர் அவர்களை இன்று ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த சம்மனில் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வட்டாரம் தெரிவிக்கிறது. எனவே டைரக்டர்  சங்கர்  இன்னிக்கு ஃபிலிம் சிட்டியில் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஏற்கனவே கமலிடம் இது போன்று நடைபெற்ற விசாரனையில் கமலிடம் போலீஸார் விபத்து நடந்ததை நடித்துக் காட்டச் சொன்னது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஷங்கரிடமும் இன்று நடித்துக் காட்டச் சொல்வார்களோ என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.