April 30, 2025
  • April 30, 2025
Breaking News
August 23, 2020

வைரலாகும் தனுஷ் மகன்கள் புகைப்படம்

By 0 717 Views

வழக்கமாக நடிக நடிகையர் தங்கள் குடும்பப் படங்களை வெளியே காட்டிக்கொள்ள ஆசைப்படுவதில்லை. அத்துடன் எப்போதும் பிஸியாக இருக்கும் அவர்களுக்கு குடும்பத்துடன் செலவழிக்க நேரமும் கிடைப்பதில்லை.

ஆனால் இந்த கொரோனா லாக் டவுன் எல்லா வரலாற்றையும் மாற்றிப் போட்டுவிட்டது. எல்லா இந்திய ஹீரோக்களும் அவரவர் வீடுகளில் தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

அப்படி தனுஷ் தன்னுடைய மகன்களுடன் நேரத்தை செலவழித்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்துக்கு சென்று இரண்டு மகன்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்தப் படம் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது.

அதிலும் இளைய மகனை முதுகில் உப்பு மூட்டை தூக்கிக் கொண்டு அவர் செல்லும் காட்சியை அவரது ரசிகர்கள் வெகுவாகவே ரசிக்கின்றனர்.

ரசிகர்களுக்கு தாங்கள் விரும்பும் நடிகர்களில் படங்கள் எவ்வளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு அவர்களுடன் இருக்கும் குடும்பத்தினரின் படமும் அந்த அளவுக்கு பிடித்தமாக இருக்கிறது.

அந்த வகையில் தனுஷ் தனது மகன்களுடன் இருக்கும் இந்தப் படம் தனுஷ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது கீழே அந்தப்படம்..!

Dhanush and sons viral photo

Dhanush and sons viral photo