June 30, 2025
  • June 30, 2025
Breaking News
April 14, 2019

தேசிய விருது போட்டியில் தாதா87

By 0 717 Views
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன்,  சரோஜா,  ஜனகராஜ், ஆனந்த பாண்டி,  ஆகியோர் நடிப்பில் கடந்த  மாதம் வெளியாகி இருந்த திரைப்படம் தாதா 87.
 
இந்த படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கையாக நடித்து தன்னுடைய துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
 
திருநங்கைகளை பெண் என்று அழைப்பபோம் என்ற இயக்குனர் குரல் புரட்சி பேசும் படமாக இப்படம் உருவாகி இருந்ததால் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் கிடைத்திருந்தது.
 
இந்நிலையில் தற்போது திருநங்கையாக நடித்து அசத்திய ஸ்ரீ பல்லவிக்கு சிறந்த நடிகைக்கான 2018-ஆம் ஆண்டுக்கான தேசிய விருது கிடைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இத்திரைப்படத்திற்கு ராஜபாண்டி ஒளிப்பதிவு செய்திருக்க, லியாண்டர் லீ மார்டின் இசையமைத்திருந்தார்.
 
இதனையறிந்த ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் தாதா 87 படக்குழுவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.