January 13, 2025
  • January 13, 2025
Breaking News
  • Home
  • Uncategorized
  • டிடி ரிட்டர்ன்ஸ் 3 திரைப்பட விமர்சனம்

டிடி ரிட்டர்ன்ஸ் 3 திரைப்பட விமர்சனம்

By on July 31, 2023 0 229 Views

முதல் இரண்டு பாகங்களை போலவே இதுவும் ஹாரார் காமெடி ஜேனர்தான். நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என்ற அளவில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் மூன்று நான்கு கதைகளை ஒன்றுக்குள் ஒன்றைப்பின்னி இன்னொரு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய் குமார்…

பாண்டிச்சேரி பக்கம் ஒரு பிரெஞ்சுக் காரர் குடும்பம் சூதாட்ட கேம் ஷோ நடத்திக் கொண்டிருக்க, அதில் பணத்தை இழந்தவர்கள் குடும்பத்தோடு அவரைக் கொளுத்தி விடுகிறார்கள். அது ஒரு தனிக் கதை.

இன்னொரு பக்கம் லோக்கல் திருடர்களான மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட குழு ஒரு திருட்டுக் கேஸில் தப்பித்து ஓடி வரும் வேளை, தப்பிக்க ஒதுங்கும் இடத்தில் ஒரு தாதாவின் கூட்டம் பெரும் பணம் வைத்துக் கொண்டிருப்பதை அறிந்து அதைத் திருட முயற்சிக்கிறார்கள்.

அந்த தாதாவோ, இன்னொரு பெரிய தாதா பெப்சி விஜயன் வீட்டில் திருட பிளான் போடுகிறார். 

பெரிய தாதாவாக இருக்கும் பெப்சி விஜயன் தன் மகன் ரெடின் கிங்ஸ்லியின் கல்யாணத்தை நடத்தும் வேளை, மணமகள் ஓடி விட, அவளது தங்கையும் படத்தின் நாயகியுமான காயத்ரியை ரெடினுக்கு மணமுடிக்க திட்டம் போட, காயத்ரியின் காதலர்களாக வரும் சந்தானம் இந்தக் கல்யாணத்தை நிறுத்த, கிங்ஸ்லியைக் காரில் கடத்துகிறார்.

மேற்படி மொட்டை ராஜேந்திரன் குரூப், தங்கள் திருட்டுக்கு சந்தானம் காரைக் கடத்த… இப்படிப் போகும் கதை கடைசியில் அந்த பிரெஞ்சுக் குடும்பம் பேய்களாக அலையும் பிரெஞ்சு பங்களாவுக்கு அத்தனை பேரையும் கொண்டு சேர்க்க, பேய்களிடம் இருந்து இவர்கள் மீண் டார்களா என்பது மொத்தக் கதை.

சந்தானம் தன் வழக்கமான காமெடி பஞ்ச் களால் மும்பாதியைக் கடத்த, 

ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கம், ஆர்.ஹரிஹர சுதன் நம்பகத் தோற்றத்துடன் உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள், எடிட்டர் என்.பி.காந்தின் விறுவிறுப்பான படத்தொகுப்பு ஆகிய அம்சங்கள், படத்தின் பொழுதுபோக்குச் சுவையை முழுமையாகப் பரிமாறக் கைகொடுத்திருக்கின்றன.