March 28, 2024
  • March 28, 2024
Breaking News
March 10, 2023

டாவின்சி ரோபோ மூலம் சிறுநீர் பாதை அறுவை சிகிச்சை வழங்கும் AINU

By 0 221 Views
  • உலக சிறுநீரக தினத்தன்று இலவச புற்றுநோய் ஸ்கிரீனிங் முகாமையும் நடத்தியது!
  • தமிழ்நாடு அரசின் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு.மா. சுப்ரமணியன் மெய்நிகர் (வெர்ச்சுவல்) முறையில் இச்சாதன செயல்பாட்டை தொடங்கி வைத்தார். 

சென்னை, 10 மார்ச் 2023 சிறுநீர்ப்பாதை சிகிச்சையில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி (AINU), புரட்சிகர அறுவைசிகிச்சை சாதனமான ‘டா வின்சி ரோபோ (daVinciRobot)’ என்பதனை அறிமுகம் செய்திருக்கிறது. புதுமையான இத்தொழில்நுட்பத்தை இந்தியாவில் வழங்கும் ஒற்றை சிறப்பு பிரிவு மருத்துவமனைகளுள் ஒன்றாக இந்த அறிமுகத்தின் மூலம் AINU இடம்பிடித்திருக்கிறது.

சிக்கலான, மிகக்குறைவான ஊடுருவலுடன் கூடிய நுண் துளை அறுவைசிகிச்சைகளை துல்லியமாகவும், கச்சிதமாகவும் சரியான இடத்தில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் செய்வதை நவீன அறுவைசிகிச்சை சாதனமான டாவின்சி ரோபோ சாத்தியமாக்குகிறது. இச்சாதன அமைப்பு சிறப்பான பார்வைத் திறனையும், மேம்பட்ட கைவினைத் திறனையும், அதிக துல்லியத்தையும் மற்றும் சவுகரியத்தையும் வழங்குவதால் சிக்கலான மற்றும் நுட்பமான உறுப்பு அகற்றல் அல்லது மறுசீரமைப்பு தேவைப்படுகிற நுண் துளை மருத்துவ செயல்முறைகளை திறம்பட செய்வதை சாத்தியமாக்குகிறது.

ஏசியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்டு யூராலஜி (AINU)-ன் நிர்வாக இயக்குநர் டாக்டர். B. அருண் குமார் இதுபற்றி கூறியதாவது: “இந்தியாவில் டாவின்சி ரோபோ வசதியை சாதன வழங்குகிற சிறப்பு ஒற்றை பிரிவு மருத்துவமனைகளுள் ஒன்றாக உருவெடுத்திருப்பதில் நாங்கள் பெரும் உற்சாகம் கொள்கிறோம். இச்சாதன அமைப்பின் மேம்பட்ட திறன்களினால் அதிக சிக்கலான மற்றும் நுட்பமான அறுவைசிகிச்சைகளையும் அதிக துல்லியத்தோடு மிகச்சரியாக எங்களால் மேற்கொள்ள இயலும்; இதன் மூலம் நோயாளியின் வலி மற்றும் தழும்பு அளவு குறைவாக இருப்பதோடு விரைவாக மீண்டு இயல்புநிலைக்கு திரும்புவதையும் இது ஏதுவாக்குகிறது.”

இதன் நிர்வாக இயக்குநரும் மற்றும் சிறுநீர்ப்பாதையியலில் முதுநிலை நிபுணருமான டாக்டர். D. வெங்கட் சுப்ரமணியம் பேசுகையில், “புதுமையான தொழில்நுட்பமான டாவின்சி ரோபோ, அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் வழிமுறையையே முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. வழக்கமான லேப்ராஸ்கோப்பி சிகிச்சையோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய மேம்பாடாகும்; பல்வேறு வகையான அறுவைசிகிச்சைகளை செய்வதற்கேற்ற திறன் வடிவமைப்பை டாவின்சி ரோபோ கொண்டிருக்கிறது. எமது நோயாளிகளுக்கு மிக சமீபத்திய மருத்துவ தொழில்நுட்பத்தின் பலன்களை வழங்க வேண்டும் என்பது AINU-வில் எங்களது குறிக்கோளாகும். டாவின்சி ரோபோ சாதன அமைப்பு நிறுவப்பட்டிருப்பது இந்த பொறுப்புறுதிக்கான சாட்சியமாக திகழ்கிறது,” என்று கூறினார்.

டாவின்சி சர்ஜிக்கல் சிஸ்டம் அறுவைசிகிச்சை நிபுணர்களுக்கு மாறுபட்ட பல்வேறு அறுவைசிகிச்சைகளை திறம்பட செய்வதற்கு உதவும் நவீன அறுவைசிகிச்சை சாதனமாகும். இந்த அறுவைசிகிச்சை சாதனம், மிகச்சிறிய வெட்டுகளை பயன்படுத்துவதால் நோயாளியின் உடலில் குறைவான கீறல்களையே செய்கிறது; இதனால் குறைவான வலி, குறைந்திருக்கும் சிக்கல்கள், மற்றும் அறுவைசிகிச்சையிலிருந்து குறைவான காலத்தில் மீண்டெழும் திறன் என்பவை டாவின்சி ரோபோ சாதனத்தினால் நோயாளிகளுக்கு கிடைக்கும் சாதகமான பலன்களாக இருக்கின்றன.

இதன் பாதுகாப்பு அம்சம் பற்றி பேசிய டாக்டர் வெங்கட், “டாவின்சி ரோபோ சாதனத்தின் பாதுகாப்பு கடந்த பத்து ஆண்டுகளில் நன்றாகவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. உலகளவில் மிகப்பரவலாக இதன் மூலம் அறுவைசிகிச்சைகள் செய்யப்படுகின்றன. உலகில் ஒவ்வொரு பதினாறு நொடிகளுக்கும் ஒரு அறுவைசிகிச்சை டாவின்சியின் மூலம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த நவீன தொழில்நுட்பத்தின் பலன்களை மக்கள் இப்போது அறியத் தொடங்கியிருப்பதால், அறுவைசிகிச்சையில் ரோபோவின் பயன்பாடு குறித்து பொதுமக்களது விழிப்புணர்வு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுத்த சில ஆண்டுகள் காலஅளவிற்குள் இது பரவலாகவும் மற்றும் மிதமான கட்டணத்திலும் கிடைக்கும் தொழில்நுட்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று குறிப்பிட்டார்.

டாவின்சி ரோபோ சாதனம் நிறுவப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் அவைகள் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது மீதும் AINU சென்னை உறுதிபூண்டிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக உலக சிறுநீரக தின அனுசரிப்பையொட்டியும் மற்றும் டாவின்சி ரோபோ அறுவைசிகிச்சை சாதன அமைப்பு அறிமுகம் செய்யப்படுவதை குறிக்கும் வகையிலும் 60 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக இலவச ஸ்கிரீனிங் முகாமை இம்மருத்துவமனை நடத்துகிறது. சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் புராஸ்டேட் (ஆண்மை சுரப்பி) புற்றுநோய்களை கண்டறிவது மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஸ்கிரீனிங் முகாமாக இது நடத்தப்படுகிறது. சிறுநீர்ப்பாதையில் ஏற்படுகின்ற புற்றுநோய்கள் மீது விரிவான புரிதலை பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும்.

டாக்டர் B அருண் குமார் மேலும் பேசுகையில், “சிறுநீர்ப்பாதையில் உருவாகும் புற்றுநோய்கள் மற்றும் அவைகள் வராமல் தடுப்பது மீதான விழிப்புணர்வை பரப்புவது என்ற குறிக்கோளில் AINU-வில் நாங்கள் பொறுப்புறுதி கொண்டிருக்கிறோம். இந்த இலவச ஸ்கிரினீங் முகாமின் வழியாக இந்த வகையான புற்றுநோய்கள் வராமல் எப்படி தடுப்பது மற்றும் அந்நோய்களின் மீதான மேலாண்மையை எப்படி மேற்கொள்வது என்பது பற்றி அவர்களுக்கு தேவைப்படுகிற புரிதலையும், தகவலையும் வழங்குவதன் மூலம் சமூகத்தின் விழிப்புணர்வை உயர்த்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆரம்ப நிலையிலேயே நோய்களை கண்டறிவதே பயனளிக்கும் வெற்றிகரமான சிகிச்சைக்கு முக்கிய அம்சம் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, தங்களது உடல் ஆரோக்கியம் பற்றி அதிகமாக அறிந்து கொள்வதற்கு வழங்கப்படும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று நாங்கள் அழைப்புவிடுக்கிறோம்,” என்று கூறினார்.

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களும் இந்த ஸ்கிரீனிங் முகாமில் பங்கேற்கலாம். சிறப்பு நிபுணர்களுடன் இலவச மருத்துவ ஆலோசனை இதில் வழங்கப்படும். அத்துடன், சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும் ஆண்மைச் சுரப்பி ஆகிய உடலுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங் மற்றும் நோயறிதல் சோதனைகளும் இலவசமாக செய்யப்படும். பொது சுகாதாரத்தை ஊக்குவிப்பதுடன் உலகத்தரத்திலான நலவாழ்வு சேவைகளை சமூகத்தினருக்கு வழங்க வேண்டும் என்ற AINU-வின் பொறுப்புறுதியை பிரதிபலிப்பதாக இந்த முன்னெடுப்பு திட்டம் இருக்கிறது.

மேலதிக தகவலுக்கு, தயவுசெய்து விஜயம் செய்க www.ainuindia.com

 

Next Post

AZUBHA ACHIEVERS AWARDS 2023

March 13, 2023 0