நன்றாக வைத்தார்கள் ரவுடி பிக்சர்ஸ் என்று தங்கள் நிறுவனத்துக்கு பெயர் – நயன்தாரா விக்னேஷ் சிவன் நடத்தும் சினிமா கம்பெனியைத்தான் சொல்கிறோம். பெயரில் என்ன இருக்கிறது… நல்ல படம் எடுத்தால் சரிதான் என்று அவர்கள் எடுத்த படங்களை ஆதரிக்கவே செய்தோம். கடைசியாக ‘கூழாங்கல்’ படத்தைக் கையில் எடுத்து அதை ஆஸ்கர் தூரத்துக்கு வீசியதில் மட்டற்ற...
போலீஸ் கதைகளில் இதுவரை நல்ல போலீஸ், தீய போலீஸ் என்று இரண்டு வகை போலீஸைத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் போலீஸ் எப்படி இயங்குகிறார்கள் என்று சொன்ன படங்கள் குறைவு. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடாத இரண்டு போலீஸ் விஷயங்களை முன்னிறுத்தி இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் புதுமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப். அவை பல...
காலம் காலமாக காதல் கதைகளுக்குப் பஞ்சம் இல்லை. அது ஒரு தலைக் காதலோ, இருதலைக் காதலோ அல்லது முக்கோணக் காதல் கதையோ, அதை எப்படிச் சொல்கிறார்கள், என்ன விதமான பிரச்சனைகளை உள்ளே வைத்து என்ன சுவாரஸ்யத்தைத் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தே காதல் கதைகள் வேறுபடுகின்றன. வித்தியாச காதல் கதைகளை யோசித்து யோசித்து கண்டவுடன் காதல்,...
எதிர்மறையான தலைப்புகள், தவறான உறவுகள், கொடூரம் கொண்ட திருப்பங்கள், சாதிய கலப்புகள் என்றெல்லாம் தமிழ் சினிமா வேறு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்க நல்ல விஷயங்களை சொல்லும் நேர்மறையான கதைகளைக் கொண்ட படங்கள் அருகி வருகின்றன. அப்படி எல்லாம் இல்லை, நாங்கள் இருக்கிறோம் என்று களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி. ...
லைக்கா புரடக்ஷன்ஸ் தயாரிக்க சுராஜ் இயக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் நாயகனாக நடிப்பதன் மூலம் மீண்டும் பரபரப்பான செய்திகளில் வந்தார் வைகைப்புயல் வடிவேலு. படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பரபரப்புக்குள்ளான படத்தின் பாடல் கம்போஸிங் வேலைகளுக்காக லண்டன் சென்ற டீமில் வடிவேலுவும் இடம் பெற்றார். தன் படத்தின் பாடல் உருவாக்கத்தில் எப்போதுமே ஆர்வம்...
இருபத்து ஏழரை மணி நேரத்தில் நடக்கும் பரபரப்பான ஒரு திரில்லர். படத்தில் முக்கிய பாத்திரமாக இருக்கும் பிரியா பவானி சங்கர் ஒரு முன்னணி மீடியாவில் வேலை பார்க்கிறார். சமையல் ஷோ நடத்தி கொண்டிருந்தவருக்கு செய்திப் பிரிவுக்கு புரமோஷன் கிடைக்க அவர் ஏற்றுக் கொள்ளும் முதல் வேலையே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகிறது. குவைத்தில் வேலை பார்க்கும்...
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது...