May 6, 2024
  • May 6, 2024
Breaking News

Currently browsing இந்தியா

பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு மத்திய அரசால் நடத்தப்பட்ட தாக்குதல் – ராகுல் காந்தி

by by Sep 6, 2020 0

இந்தியாவில் கடந்த ஆண்டு மத்தியில் இருந்தே பொருளாதார மந்த நிலை ஏற்படத்தொடங்கியது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) பாதிக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில் கொரோனா காரணமாக பொது ஊரடங்கால் நாட்டின் ஜிடிபி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. 
 
கடந்த காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23.9 சதவீதமாக  குறைந்துள்ளது.
 
இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான ஜிடிபி வீழ்ச்சி ஆகும். மேலும், மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி…

Read More

கொரோனா வார்டு கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர் – வைரல் வீடியோ

by by Aug 30, 2020 0

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியின் கொரோனா வார்டில் உள்ள டாய்லெட் சுத்தமாக இல்லை எனவும் அங்கு வசதி சரியாக இல்லை எனவும் நோயாளிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அறிந்து, அந்த வார்டுக்கு சென்ற அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், நோயாளிகளிடம் நலம் விசாரித்தது மட்டுமல்லாமல், மருத்துவமனையில் உள்ள குறைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து, நேற்றும் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அந்த அமைச்சர். அப்போதும் வார்டில் உள்ள கழிவறை சுத்தம் செய்யப்படாமல்…

Read More

Breaking News விஜய் ரசிகர்கள் மீதான அமைச்சர் செல்லூர் ராஜுவின் விமர்சனம்

by by Aug 29, 2020 0

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் – மத்திய அரசு அறிவிப்பு.

செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி நிலையங்கள் திறக்க தடை தொடரும் – மத்திய அரசு.

மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்ல முழுமையான அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

மாநிலத்திற்குள்ளாகவோ, மாநிலம் விட்டு மாநிலம் செல்லவோ இ-பாஸ் பெற தேவையில்லை – மத்திய அரசு.

மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது என உத்தரவு…

Read More

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய ரோஜா

by by Jul 11, 2020 0

திரையுலகில் இருந்து அரசியலுக்கு சென்று வெற்றிக் கொடி நாட்டியவர்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார் அல்லவா?

அதில் நகரி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். அப்போது அவர் 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்சை ஓட்டிச் சென்றார்….

Read More

சீனாவுக்கு பதிலடி தர இந்திய ராணுவம் தயார் – பாதுகாப்புத்துறை கூட்ட முடிவு

by by Jun 21, 2020 0

சீன எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், பாகிஸ்தான் உடனான எல்லைப் பாதுகாப்பு குறித்தும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் விமானம், ராணுவம், கப்பல் ஆகிய முப்படை தளபதிகளும் பங்கேற்றனர்.
இந்நிலையில், சீனாவின் எந்தவொரு ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் சமாளிக்க இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்,…

Read More

திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் – மத்திய அமைச்சர் விளக்கம்

by by Jun 3, 2020 0

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்படத் துறை பிரதிநிதிகளுடன் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் காணொலி காட்சி மூலம் நேற்று உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்தியாவில் உள்ள

9,500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு 30 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வந்ததாக கூறினார்.

குறிப்பாக மத்திய அரசு ஊரடங்கை அறிவிப்பதற்கு முன்னரே, கொரோனா அச்சத்தால் மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் திரையரங்குகள் பூட்டப்பட்டு விட்டதாகவும் அவர்…

Read More

கேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்

by by May 25, 2020 0

கேரளாவில் ஷூட்டிங்-க்காகப் போடப்பட்டிருந்த சர்ச் செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட… விஷயம் சி எம் கவனத்துக்குப்போய் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘மின்னல் முரளி’ என்ற படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

  ஆனால்,  இந்த அரங்குக்கு எதிரிலே மகாதேவன் கோயில் இருந்ததால், இந்த சர்ச் அமைப்பதற்கு ஏற்கெனவே எதிர்ப்பு…

Read More

முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை விரைவில் ஊரடங்கு பற்றி புதிய அறிவிப்பு

by by Apr 27, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்தை கடந்துள்ளது. மொத்தம் 27,892  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்துள்ளது.
 
6185 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் எனினும் கொரோனாவின் பாதிப்பு குறையாததால், அறிவித்துள்ளபடி மே 3-ந்தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்போவதாக சில மாநிலங்கள் அறிவித்து உள்ள சூழ்நிலையில், பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி மூலம் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.  
 
இந்த ஆலோசனையில்…

Read More

ஊரடங்கு நீட்டிப்பா? பிரதமர் மோடி 27- ல் மீண்டும் கலந்துரையாடல்

by by Apr 22, 2020 0

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்படைந்து வருகிறது. தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதிக்கப்பட்டோர்  எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
 
அனைத்துநாடுகளும் கொரோனா வைரசில் இருந்து காத்துக்கொள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு  உள்ளது.
 
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல் மந்திரிகளுடனும் பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி வீடியோ கான்பரன்சில் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டு…

Read More

ஊரடங்கில் தடபுடலாக நடந்த முன்னாள் பிரதமர் – முதல்வர் இல்ல திருமணம் வீடியோ

by by Apr 18, 2020 0

முன்னாள் இந்திய பிரதமர் தேவேகவுடாவின் பேரனும் கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மகன் நிகில் குமாரசாமிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மகள் ரேவதிக்கும் பெங்களூருவுக்கு அருகேயுள்ள பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஹெச்.டி.குமாரசாமியின் மகன் திருமணம் நடைபெறுவது ஊடகங்களில் முக்கிய தலைப்புச் செய்தியாக இடம் பிடித்தது.

கர்நாடகா மாநில அரசு சார்பில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திருமண இடம்…

Read More