November 26, 2024
  • November 26, 2024
Breaking News

Currently browsing இந்தியா

இந்தியாவில் 3.20 லட்சம் கோடி முதலீடு செய்ய ஜப்பான் பிரதமர் உறுதி

by by Mar 19, 2022 0

டெல்லி – இன்று 14 வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று மாலை 5 மணியளவில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை பிரதமர் வரவேற்றார். 14-வது உச்ச மாநாட்டில் பிரதமர் இருவரும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ…

Read More

ஹிஜாப் தடை தொடர கர்நாடக உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையீடு

by by Mar 15, 2022 0

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ, மாணவியர் சீருடை அணிந்து வரவேண்டும் என அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால், அந்தக் கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்ததற்கு கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது.

அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவிகள் பர்தா அணிந்து போராட்டம் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும்…

Read More

இந்திய ஆட்சிப் பணி விதிகள் திருத்தம் மாநில உரிமையைப் பறிக்கும் செயல் – விடுதலைச் சிறுத்தைகள்

by by Jan 21, 2022 0

ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை எப்போது வேண்டுமானாலும் ஒன்றிய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம் என பாஜக அரசு கொண்டுவரவுள்ள திருத்தத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில உரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான பணி விதிகள் 1954 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன. மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் இந்த அதிகாரிகளை ஒன்றிய அரசுப் பணிகளுக்கு அழைப்பதென்றால் மாநில அரசின்…

Read More

பிரதமர் மோடிக்கு வாங்கப்பட்டுள்ள அதி நவீன கார்கள் பற்றி அரசு விளக்கம்

by by Dec 30, 2021 0

பிரதமர் மோடி பயணிக்க ரூ.12 கோடி விலையில் இரண்டு ‘மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார்டு’ ரக கார்கள் வாங்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து பற்றிய புதிய தகவல்களை மத்திய அரசு வட்டாரங்கள் நேற்று வெளியிட்டன.

அந்தத் தகவல்களில் இருந்து…

ஊடகங்களில் வெளிவந்த தகவல்களை விட வாங்கப்பட்டுள்ள கார்களின் விலை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள விலையில் மூன்றில் ஒரு பங்குதான்.

எஸ்.பி.ஜி. (அதிரடி கமாண்டோ படை) பாதுகாப்பு வரையறையின்படி 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

Read More

கோவிட் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படத்தை எதிர்த்து வழக்கு – கேரள உயர்நீதி மன்றம் தள்ளுபடி

by by Dec 13, 2021 0

கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழில்  பிரதமர் மோடியின் படம் இல்லாமல் சான்றிதழ் கிடைக்க வேண்டும் என்று கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் பீட்டர் மைலிபரம்பில் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  அவர் நமது நாட்டின் பிரதமர், வேறு நாட்டின் பிரதமர் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  அவர் பிரதமராகி உள்ளார். உங்களுக்கு அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருக்கலாம் அதற்காக இதை நீங்கள் வலியுறுத்த முடியாது. …

Read More

ஒமிக்ரான் கொரோனா பரவல் – கவனமாக இருக்க பிரதமர் மோடி அறிவுறுத்தல்

by by Nov 29, 2021 0

இந்திய பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதிலிருந்து…

1. இந்த குளிர்கால கூட்டத்தொடர் மிக முக்கியமானது.

2. நாட்டின் வளர்ச்சிக்கு புதிய பாதை உருவாக்க வேணடும்.
 
3. அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதில் அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.
 
4. குளிர்கால கூட்டத்தொடர் பயனுள்ளதாக அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
 
5. புதிய வகை ஒமிக்ரான் கொரோனா பரவிவரும் நிலையில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Read More

பைக்கில் பயணம் செய்து கோவாவில் ஆதரவு திரட்டும் ராகுல் காந்தி

by by Oct 30, 2021 0

அடுத்த ஆண்டு கோவா மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்க, அதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. 

கோவாவில் ஆட்சியைப் பிடிப்பதில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது.
 
அதான் ஒரு கட்டமாக மம்தா பானர்ஜி கோவாவில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 
 
கோவாவில் தேர்தல் பணிகள் தொடங்கிய நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் முறையாக கோவாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இன்று பாம்போலிம் பகுதியில் இருந்து…

Read More

கர்நாடகா ஆந்திராவில் கொரோனா நோயாளிகள் தலைமறைவு

by by Apr 29, 2021 0

கர்நாடகாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3000க்கும் அதிகமான நோயாளிகள் தலைமறைவாகி இருப்பதாக அம்மாநில வருவாய் துறை அமைச்சர் அசோகா தெரிவித்திருக்கிறார்.

வீட்டில் இருந்து வெளியேறிய அத்தனை பேரும் அ செல்போன்களை அணைத்து வைத்திருப்பதாகவும், தற்போது எங்கு தங்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது கொரோனா பரவலை மேலும் தீவிரமாக்கிவிடும் என்பதால் தலைமறைவாகி உள்ள நோயாளிகள் தயவுசெய்து செல்போனை ஆன் செய்ய வேண்டும் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்வதாக அமைச்சர் அசோகா கேட்டுக்்கண்டிருக்கிறார்.

இதனிடையே, திருப்பதியிலும் கொரோனா தொற்றால்…

Read More

அதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை

by by Apr 8, 2021 0

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு 1 லட்சத்தை கடந்து விட்டது. அந்த வகையில் நேற்று 1.15 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து  இருக்கிறது.

முக்கியமாக மராட்டியம்், பஞ்சாப், தமிழகம் கர்நாடகா மற்றும் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதையடுத்து முக்கிய நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்த இருக்கிறார் என்று…

Read More

5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ.517.82 கோடி

by by Sep 22, 2020 0

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் அளித்துள்ள பதிலில்…
 
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது…’’ என்று கூறி உள்ளார்.
 
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட…

Read More