May 2, 2024
  • May 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

டிரைவர் ஜமுனா திரைப்பட விமர்சனம்

by by Dec 28, 2022 0

பெண்கள் விண்வெளிக்கே செல்லும் இந்தக் காலக் கட்டத்தில் ஒரு பெண் டாக்ஸி ஓட்டும் இந்தக் கதை புதுமையானது இல்லைதான். ஆனால் அப்படி டாக்ஸி ஓட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்வில் அவர் சந்தித்தது என்ன, சாதித்தது என்ன என்பதைப் புதுமையாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் கின்ஸ்லின்.

பக்கவாதம் வந்த அம்மாவுடன் வாழும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் இறந்து போன அப்பா செய்த வேலையான டாக்ஸி ஓட்டுனராக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் மூவர் கொண்ட ஒரு கூலிப்படை பலரைக் கொன்று கொண்டிருக்க,…

Read More

உடன்பால் திரைப்பட விமர்சனம்

by by Dec 26, 2022 0

தியேட்டர்களில் எந்தப் படமும் வெளியாகலாம். ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாவதற்கு என்று படங்களுக்கு சில தகுதிகள் உண்டு. அந்த தகுதியை சரியாகப் புரிந்து கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் படம் இது.

குடும்பத்துடன் அமர்ந்து சிரித்து மகிழ்ந்து  பார்க்க வேண்டிய படமாக அமைந்திருக்கும் உடன்பால், வாழ்க்கையின் நிலையாமையையும், தேவைகளைக் கொண்ட மனித மனங்களின் உக்கிரங்களையும் எள்ளி நகையாடி சாடுகிறது.

நகைச்சுவை நடிகராக அறியப்பட்டிருக்கும் சார்லி, எந்த விதமான குணசித்திர வேடத்தையும் ஏற்று நடிக்க வல்லவர் என்பது தெரிந்த செய்திதான். ஆனால் இதுவரை…

Read More

தேசிய விருது பெற்ற இயக்குனரின் பேரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டியர் டெத்’

by by Dec 26, 2022 0

SNR பிலிம்ஸ் சார்பில் சதீஷ் நாகராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியர் டெத்’. சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீதர் வெங்கடேசன் எழுதியுள்ளார். இயக்குனர் பிரேம்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இதுவரை இறப்பு என்றாலே நெகட்டிவ் ஆகத்தான் பார்க்கப்படுகிறது. ஆனால் சாவு என்பது பயப்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அது கம்பீரமானது.. இறப்பு ஒரு மனிதனாக நம்மிடம் பேசினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதை. அன்றாடம் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி…

Read More

புரொஜக்ட் சி – சாப்டர் 2 திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2022 0

ஐந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டு ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை சுவாரஸ்யம் தட்டாமல் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் வினோ.

நாயகனாக ஸ்ரீ. தண்ணீர் கேன் தொழிற்சாலையில் கிடைத்த வேலையை செய்து கொண்டிருப்பவருக்கு அவரை ஒருதலையாக காதலித்த பெண்ணால் வேலை போகிறது.

வாழ்க்கை வெறுத்து தற்கொலை வரை போகும் அவருக்கு அடுத்து உடல்நிலை சரியில்லாத ஒரு விஞ்ஞானியை பார்த்துக்கொள்ளும் வேலை கிடைக்கிறது.  அவர் கண்டுபிடித்த ஒரு பார்முலா மருந்தை வைத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்.

இந்த விஷயம் தெரிந்து ஸ்ரீயிடம் இருக்கும் பணத்தை…

Read More

நெடுநீர் திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2022 0

வன்முறைப் பாதைக்கு செல்லும் நாயகனின் (இன்னொரு) கதையைக் கொண்ட படம். கத்தியை எடுத்தவன் கத்தியால் சாவான் என்றிருக்க இதில் வன்முறைப் பாதைக்குச் செல்லும் நாயகன் ராஜ் கிருஷ்ணன் என்ன ஆகிறார் என்பது கதை.

சிறு வயதில் இருந்து ஒன்றாக வளரும் ராஜ்கிருஷ்ணன், மற்றும் இந்துஜா வாழ்க்கை சூழலால் பிரிகின்றனர். எதிர்பாராத விதமாக சண்டையில் ஒருவனை ராஜ் கிருஷ்ணன்  கொன்று விட, இதைக் கண்ணுறும் தாதாவான அண்ணாச்சி சத்யா முருகன், அவரை மீட்டு  தன் அடியாளாக வைத்துக்கொள்கிறார்.

தன் உயிரைக்…

Read More

பாசக்கார பய திரைப்பட விமர்சனம்

by by Dec 25, 2022 0

90களில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான விக்னேஷை இப்போது இருக்கும் 2கே கிட்ஸ் அறிவார்களா என்பது தெரியாது. ஆனால் 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் அறிமுகமானவர்தான் விக்னேஷ்.

தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிற பாலு மகேந்திராவின் கரங்களால் ஹீரோவாக அறிமுகமாக இருந்த விக்னேஷ் அப்போது அது முடியாமல் போக பின்னாளில் அதே பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லா படத்தில் இரு நாயகர்களில் ஒருவரானார்.

அப்படிப்பட்டவரை இப்போது ஹீரோவாக்கி ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் விவேக பாரதி.

Read More

கல்லூரியை கைவிட்டவர் காலேஜைப் பிடித்தார் – காலேஜ் ரோடு சுவாரஸ்யம்

by by Dec 24, 2022 0

நடிகர் லிங்கேஷ். பல படங்களில் வில்லனாக, குணச்சித்திர நடிகராக அறியப்பட்டவர்.

இவர் நடித்த கபாலி, பரியேறும் பெருமாள் , படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தாலும் கதா நாயகனாக இப்போதுதான் காலேஜ் ரோடு படத்தில் அறிமுகமாகிறார்.

காலேஜ் ரோடு திரைப்படம் டிசம்பர் 30 அன்று திரையரங்கில் வெளியாக இருக்கிறது .

ஏற்கனவே இந்த திரைப்படத்தை இயக்குனர் ரஞ்சித் அவர்கள் பாராட்டியுள்ளார்.

மாணவர்களின் கல்விக் கடனை பற்றி பேசி இருக்கும் இத்திரைப்படம்…

Read More

என்ஜாய் திரைப்பட விமர்சனம்

by by Dec 22, 2022 0

‘என்ஜாய்’. என்றால் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அத்தனையும் இருக்கிறது படத்தில். ஆனால், படத்தில் சொல்லப்படும் விஷயம் இதுதான்.

கற்பு என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க, அதை பெண்களுக்கு மட்டுமானதாக – குறிப்பாக வசதி இல்லாத பெண்களுக்கு மட்டுமானதாக இந்த சமுதாயம் நினைக்க அதை ஏன் மீரக் கூடாது என்பதுதான்.

ஆனால், திருமணம் ஆனபின்பு ஒருவனுக்கு மட்டும் கற்புடன் இருக்கலாம் என்ற செய்தி ஆறுதல் அளிக்கிறது.

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மதன்குமார், சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் டான்சர் விக்னேஷ், பணக்கார…

Read More

கனெக்ட் திரைப்பட விமர்சனம்

by by Dec 21, 2022 0

உலகம் எப்போதும் நிலையாக ஒளியுடன் இருந்தாலோ அல்லது முற்றிலும் இருளாக இருந்தாலோ பேய் பற்றிய பயமே இல்லாமல் இருக்கும். ஒளியும், இருளும் கலந்து நிற்பதுவே பயத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல்தான் ஒலி விஷயத்திலும்..!

இந்த உண்மையைச் சரியாக புரிந்து, அதை லாவகத்துடன்  பயன்படுத்தினால் ஒளி, ஒலியை அடிப்படையாகக் கொண்ட சினிமா செல்லுலாய்டில் பேய் பற்றிய பயத்தை ஏற்படுத்த இயலும் எனபதைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார் இயக்குனர் அஷ்வின் சரவணன் இந்தப் படத்தின் மூலம்.

ஆனால், பேய்ப் படங்கள் பலவற்றையும் பார்த்து…

Read More

தையல் நாயகி ஆகிறார் த்ரிஷா – ராங்கி பட சுவாரஸ்யங்கள்

by by Dec 19, 2022 0

த்ரிஷா சமீபத்தில்தான் ‘லைகா புரொடக்‌ஷன்ஸ்’  தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கி  வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை பாத்திரத்தில் வந்து கலக்கி இருந்தார். 

இப்போது அதே ‘லைகா’ தயாரிப்பில் அவர் கதை நாயகியாக நடிக்கும் ராங்கி படம் வரும் 30ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கி இருக்கிறார். த்ரிஷாவுடன் அனஸ்வரா ராஜன், ஜான்மகேந்திரன் உட்பட கலைஞர்கள் நடித்துள்ள இந்தப்படத்துக்கு சி.சத்யா இசையமைத்திருக்கிறார். கபிலன் பாடல்கள்…

Read More