August 30, 2025
  • August 30, 2025
Breaking News

Currently browsing நிகழ்வுகள்

ரெட்ரோ வெற்றி ; மீடியாக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

by by May 8, 2025 0

“ரெட்ரோ” நன்றி அறிவிப்பு நிகழ்வு !

முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் லாபத்தில் 10 கோடி ரூபாயை, அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.  

இப்படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளது. இந்நிலையில், இன்று…

Read More

பத்து கதைகள் வந்தால் ஐந்தில் சூரி ஹீரோ என்கிறார்கள்..! – லோகேஷ் கனகராஜ்

by by May 7, 2025 0

நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..!

நடிகர் சூரி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மாமன்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன் ‘ எனும் திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் ,சாயா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்….

Read More

கே.பாக்யராஜுக்கு முருங்கைக்காய் பரிசளித்த ஆண்டவன் டீம்..!

by by May 4, 2025 0

“ஆளில்லாத கிராமங்கள் அதிகரித்து வருகிறது, கிராமங்களை காப்பாற்றுங்கள்!” என்ற கோஷத்துடன் இம்மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது ‘ஆண்டவன் ‘ திரைப்படம்.

“ஆண்டவன்” படத்தின் இசை விழாவில் இயக்குனர் கே.பாக்யராஜ், ஜாகுவார் தங்கம், கேந்திரன் முனியசாமி, கஞ்சா கருப்பு, முத்துக்காளை, மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக் கொண்டு, இயக்குனர் வில்லிதிருக்கண்ணன், கதாநாயகன் மகேஷ், கதாநாயகி வைஷ்ணவி மற்றும் படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்வில் முந்தானை_முடிச்சு நாயகன் கே பாக்யராஜ்க்கு முருங்கைக்காய் பரிசு அளித்தனர் “ஆண்டவன்” படக்குழுவினர்!

Read More

போர் தொழில், ராட்சசன் வரிசையில் ‘லெவன்’ படமும் இணையும்..! – டி.இமான்

by by May 1, 2025 0

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.

கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை…

Read More

குற்றம் தவிர் நிகழ்வில் பி.ஆர்.ஓவை குறுக்கு விசாரணை செய்த கங்கை அமரன்..!

by by Apr 28, 2025 0

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.

‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை…

Read More

தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்..! – நேச்சுரல் ஸ்டார் நானி

by by Apr 26, 2025 0

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ ( HIT – The Third Case) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,…

Read More

விஜய்யிடம் சச்சின் போனது பற்றி சொன்னால் ஒரு நாள் போதாது..! – எஸ். தாணு

by by Apr 26, 2025 0

*மறு வெளியீட்டிலும் வெற்றியடைந்த ‘சச்சின்’ திரைப்படக்குழுவின் சக்ஸஸ் மீட்!*

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளை மீண்டும் பார்த்து கொண்டாடுவதை காண முடிகிறது. விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடாகி மாபெரும் வெற்றி பெற்றது, இதற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ள நிலையில், பழைய ‘பிளாக்பஸ்டர்’ படங்கள் திரையரங்குகளில் மீண்டும் வெளியாவது ரசிகர்களிடையே உற்சாகத்தை மேலும்…

Read More

சிறிய பட்ஜெட்டில் நல்ல படங்கள் எடுங்கள்..! – ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்

by by Apr 26, 2025 0

ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம்…

Read More

ஒரு கிலோ அறிவாளியாக இருந்தாலும் 10 கிராம் அதிர்ஷ்டக்காரனிடம் கைகட்டி நின்றாக வேண்டும்..! – இயக்குநர் கே.பாக்யராஜ்

by by Apr 25, 2025 0

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், இவர் இயக்குநர் கே.எஸ் அதியமானிடம் உதவியாளராக பணியாற்றியவர்..

தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் கண்மணி கதாநாயகியாகவும் மற்றும் முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர் மனோஜ்குமார் வடிவுக்கரசி, நீலிமா இசை, நிஹாரிகா, அஹானா என இரு குழந்தைகள் நடித்துள்ளனர் மேலும் தர்ஷன் சிவா என்ற புதுமுகம் மிரட்டலான கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

தமிழ்நாடு மற்றும்…

Read More

சூரியின் கதை தேர்ந்தெடுக்கும் திறன் வியக்க வைக்கிறது..! – மண்டாடி பட இயக்குநர்

by by Apr 21, 2025 0

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்
Sports Action Drama படமாக உருவாகிறது.

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு…

Read More