September 1, 2025
  • September 1, 2025
Breaking News

Currently browsing நிகழ்வுகள்

நல்ல கதை இருந்தால் சின்ன பட்ஜெட் படங்களை எடுக்கலாம் – இறுகப்பற்று தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

by by Oct 13, 2023 0

சின்ன பட்ஜெட்டில் அதேசமயம் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தொடர்ந்து தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த அக்-6ஆம் தேதி வெளியான ‘இறுகப்பற்று’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று மாலை நடைபெற்ற நன்றி…

Read More

ஜிவி பிரகாஷ் நடிப்பில் 25 வது பிரமாண்ட படத்தை ‘உலக நாயகன்’ தொடங்கி வைத்தார்

by by Oct 11, 2023 0

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்!

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கிங்ஸ்டன்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

Read More

சமூக விரோதிகளை ஆதரிக்கும் ரஜினி – பட விழாவில் திருமுருகன் காந்தி

by by Oct 10, 2023 0

சியோன் ராஜா எழுதி இயக்கி ஜியோனா பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் படம் ‘சமூக விரோதி’ .இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பர்ஸ்ட் லுக் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் வெளியிடப்பட்டன.

இவ்விழாவில் பல்வேறுபட்ட அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,திராவிட இயக்க அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்,மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவர் வசீகரன், தமிழக…

Read More

அயலான் விஷுவல் எபெக்ட்டுகள் இந்தியாவிலேயே இல்லை – சிவகார்த்திகேயன்

by by Oct 9, 2023 0

’அயலான்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.

நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார்,…

Read More

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பற்றி நான் பேச மாட்டேன்; நீங்கள் பேசுவீர்கள் – கார்த்திக் சுப்பராஜ்

by by Oct 9, 2023 0

*கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு*

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது.

‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’…

Read More

திரைப்பாடல்களில் நாட்டுப்புற வடிவத்தைக் கொண்டு வந்தவர் என்.எஸ்.கே – திண்டுக்கல் லியோனி

by by Oct 9, 2023 0

‘டப்பாங்குத்து’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

பாரதிராஜாவின் ‘தெற்கத்தி பொண்ணு’ நடிகர் சங்கர பாண்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டப்பாங்குத்து’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக இசை வெளியீட்டு விழாவில் பட்டிமன்ற பேச்சாளரும், நடிகரும், தயாரிப்பாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்களும், நாட்டுப்புற கலைஞர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இப்படத்தின் இசையை திண்டுக்கல் ஐ….

Read More

புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஷார்ட் ஃபிளிக்ஸ் – தயாரிப்பாளர், நடிகை நீலிமா இசை

by by Sep 26, 2023 0

வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது.

இதைத் தொடர்ந்து படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன் போது ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தின் நிறுவனர்கள் பரணிதரன் மற்றும் செந்தில்குமார், நடிகர் அர்ஷத், நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி,…

Read More

நான் பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதான்- விஜய் சேதுபதி

by by Sep 25, 2023 0

*இறைவன்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!*

பேஷன் ஸ்டுடியோஸ், சுதன் சுந்தரம் தயாரிப்பில் ஐ. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ‘இறைவன்’ படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் அ. வினோத் பேசியதாவது, “படத்தின் டிரெய்லர் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படத்திற்காக காத்திருக்கிறேன். ஜெயம் ரவி சார் நெகடிவ் ரோலில் நடித்தால் நன்றாக இருக்கும்….

Read More

விஷால் சொன்னது கூட சனாதனம்தான் – ‘எனக்கு என்டே கிடையாது’ தயாரிப்பாளர் கார்த்தி 

by by Sep 25, 2023 0

Hungry Wolf Entertainment And Production LLP சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனக்கு என்டே கிடையாது’. அறிமுக இயக்குநர் விக்ரம் ரமேஷ் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளதுடன் படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராகவும் நடித்துள்ளார்.

தயாரிப்பாளரான கார்த்திக் வெங்கட்ராமன் இன்னொரு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகியாக ஸ்வயம் சித்தா நடித்துள்ளார். மேலும் சிவகுமார் ராஜு, பிச்சைக்காரன் புகழ் முரளி சீனிவாசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Read More

ஆத்திகரும் நாத்திகரும் ஒரே மேடையில் தோன்றிய கபில் ரிட்டன்ஸ் பாடல்கள் வெளியீட்டு விழா

by by Sep 25, 2023 0

“கபில் ரிட்டன்ஸ்” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

தனலட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை பேராசிரியர்.ஸ்ரீனி சௌந்தரராஜன் இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தில் நிமிஷா ரியாஸ்கான், ‘பருத்திவீரன்’சரவணன், வையாபுரி, மாஸ்டர் பரத், மாஸ்டர் ஜான், பேபி ஷர்ஷா மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.

இதன் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேராசிரியர் சுப வீரபாண்டியன், இயக்குனர்கள் ஆர்.வி. உதயகுமார், பேரரசு, கவிஞர் சினேகன், பட அதிபர் என்.விஜயமுரளி நடிகர் வையாபுரி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Read More