July 7, 2025
  • July 7, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

சினிமாவிலிருந்து நாடகத்துக்கு வந்தவன் நான் – கமல்ஹாசன்

by by Nov 6, 2021 0

மகிழ் மன்றம் மற்றும் டம்மீஸ் ட்ராமா வழங்க ஶ்ரீவத்சன் நடித்து இயக்கிய “விநோதய சித்தம்” மேடை நாடகம் நேற்று (5-11-2021) நாரத கான சபாவில் நடைபெற்றது. 

நாடகம் அரங்கேறிய மேடையில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசியதிலிருந்து…

“நான் இங்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் கேபி சார் தான். அவரையும் என்னையும் தனியாக பிரிக்க முடியாது. எனக்கு கிடைக்காத பாக்கியம் திரு ஶ்ரீவத்சன் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கேபி சாருக்கு அவர் கதை…

Read More

ஜெய் பீம் பார்த்து கண்கள் குளமான கமல்

by by Nov 2, 2021 0

நேற்று இரவு அமேசான் பிரைம்  தளத்தில் வெளியானது சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரித்திருக்கும் ஜெய் பீம்.

பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா முக்கிய பாத்திரமேறறு நடித்திருக்கும் இந்த படத்தில் மணிகண்டன், லிஜோ மோள் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானாலும் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் விஐபிகளுக்கு திரையிடப்பட்டு வருகிறது. அப்படி நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்த்து ரசித்து பாராட்டினார். 

நேற்று கமலுக்கு இப்படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த கமல், படக்குழுவினரை…

Read More

பாக்ஸிங் கற்றுக் கொண்டு வந்த ஆர்யா என்னை வெளுத்து விட்டான் – விஷால்

by by Oct 29, 2021 0

தீபாவளிக்கு விஷால் ஆர்யா நடிப்பில் பிரமாண்ட திரில்லர் திரைப்படமாக பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகிறது “எனிமி” திரைப்படம்.

படவெளியீட்டை ஒட்டி இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விஷால்,ஆர்யா, மிருணாளினி, இயக்குநர் ஆனந்த் சங்கர், கருணாகரன், தயாரிப்பாளர் வினோத்குமார் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில் விஷால் பேசியதாவது:

என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட…

Read More

ஜெய் பீம் எனக்கு சவாலான திரைப்படம் – சூர்யா

by by Oct 29, 2021 0

இந்த தீபாவளிக்கு ‘ஜெய் பீம்’ திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது தெரிந்த விஷயம்தான். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன.

நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார்.

‘ஜெய் பீம்’ திரைப்படம் பற்றி சூர்யா கூறும்போது, “24 ஆண்டுகள் ஆகிவிட்டன…

Read More

ரஜினி உடல்நிலையில் இதுதான் பிரச்சினையாம்..!

by by Oct 29, 2021 0

நேற்று திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார்.

அவரது உடல்நிலை பற்றி பல்வேறு யூக, வதந்திகளும் உலாவி வந்த நிலையில் ரஜினியின் குடும்பத்தினர் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அது வருமாறு…   

ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாம்.

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னையில்…

Read More

நவம்பர் 2 ல் உலகம் முழுதும் 240 நாடுகளில் ஜெய் பீம்

by by Oct 28, 2021 0

ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

சூர்யா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, ரசிகர்களை வியக்கவைக்கத் தவறியதில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சிறப்பாக நியாயம் செய்வார். அது ஒரு காவலர் பாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு தொழிலதிபர் பாத்திரமாக இருந்தாலும் சரி. இல்லை அடுத்த வீட்டு பையன் போல்…

Read More

தீபாவளிக்கு எங்க ஓடிடி பாக்காதீங்க- அமேசான் அதிரடி வேண்டுகோள்

by by Oct 26, 2021 0

அமேசான் பிரைம், தீபாவளி பண்டிகையையொட்டி வீடியோ ஒன்று வெளியிட்டிருக்கிறது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா (Kaleen Bhaiyya) நடிச்சிருக்கார்.

அந்த வீடியோ, தீபாவளி அன்று ‘அமேசான் பிரைம்’ ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது.

எந்த நிறுவனமும் செய்ய துணியாததை அமேசான் பிரைம் நிறுவனம் செய்துள்ளது. அந்த வீடியோவில், ‘நாளை அமேசான் பிரைம் நம்முடன் தான் இருக்கப்போகிறது. நாம் அதை பின்பு கூட பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால்…

Read More

வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் படத்தை வெளியிடும் ஸ்டுடியோ கிரீன்

by by Oct 24, 2021 0

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’.

இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன்மரியதாசன் அவர்கள் தயாரித்துள்ளார்.வெயில், அங்காடித் தெரு, அரவான்,காவியத்தலைவன் உள்ளிட்டதரமான படங்களை இயக்கிய ஜி.வசந்தபாலன் தற்போது கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ஜெயில்’.

இந்தத் திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடிக்கிறார். தேன் திரைப்படத்தின்மூலமாக அறிமுகமான அபர்ணதி…

Read More

தீபாவளிக்கு தியேட்டர் கிடைக்க போராடுவேன் – எனிமி தயாரிப்பாளர் வேதனை ஆடியோ

by by Oct 22, 2021 0

விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள எனிமி படம் தீபாவளிக்கு வெளிவர இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு பிரமாண்ட படம் வர இருப்பதால், இந்த படத்திற்கு போதுமான தியேட்டர்கள் தராமல் படம் வெளிவருவதை தடுக்கிறார்கள் என்று தயாரிப்பாளர் வினோத் குமார் வேதனையுடன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், எனிமி படத்தை தயாரித்துள்ளேன். நவ.,4ல் ரிலீஸ் செய்ய உள்ளோம். ஆனால் பல ஏரியாக்களில் இப்போது நடக்கும் பிரச்னை என்னவென்றால் ஒரு பெரிய படம்…

Read More

அமலாவை அம்மாவாக ஆக்கிய நெகிழ வைக்கும் கதை..!

by by Oct 22, 2021 0

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் “கணம்”. அம்மாவின் பாசத்தை வைத்து உருவாகும் சயின்ஸ் பிக்சன் திரைப்படம் இது ! 

தமிழ் சினிமாவில் மாறுபட்ட முயற்சிகளுக்கு முதல் புகலிடமாகவும், வித்தியாசமான களங்களில் புதுமையான கதைகளை ரசிகர்களுக்கு அளித்து வரும் நிறுவனமாகாவும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் விளங்கி வருகிறது. “அருவி, என் ஜி கே, கைதி” இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் ரசிகர்களிடம்…

Read More