April 6, 2020
  • April 6, 2020
Breaking News

Currently browsing தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை – முதல்வர்

by by Apr 3, 2020 0

வெளிமாநில தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சமுதாய நல கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று   நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்திலும் ஆய்வு செய்தவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதிலிருந்து:-

வெளிமாநிலங்களில் இருந்து 1.34 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி வேலை செய்கின்றனர். அந்தத் தொழிலாளர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை உள்ளிட்ட  பல்வேறு உதவிகளை அரசு செய்துள்ளது. 

மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவே ஊரடங்கு…

Read More

ஏப்ரல் 14 க்கு மேல் ஊரடங்கு நீட்டிக்கப் படுமா – முதல்வர் பதில்

by by Apr 1, 2020 0

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சரியான உணவு கிடைக்காமல் ஏழை மக்கள் அவதிப்படுகின்றனர்.
 
தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. 
 
இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.
 
உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். உணவை சாப்பிட்டு பார்த்த அவர், அங்கு…

Read More

கொரோனா பற்றி அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்வதை கவனமாக கேளுங்க

by by Mar 29, 2020 0

Read More

ஊரடங்கு விடுமுறை அல்ல – முதல்வர் விளக்கம்

by by Mar 25, 2020 0

கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு குறித்து , தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார்.

அதில் அவர் பேசியதன் சாராம்சம் ;

1.இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 606 ஆக உயர்வு

2.மத்திய அரசின் வேண்டுகோள்படி 21 நாள் ஊரடங்கை நாம் கடைபிடிக்க வேண்டும்

3.கொரோனா பரவுவதை தடுக்க எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும்

4.கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

5.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.3,280 கோடி…

Read More

நிரம்பி வழியும் வெளியூர் பஸ்கள் – நம்பிக்கை தரும் அமைச்சர்

by by Mar 23, 2020 0

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக மாநிலம் முழுவதும் நாளை மாலை முதல், 144 தடை உத்தரவு அமலாகிறது.

இதனால் சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளால் கோயம்பேடு பேருந்து நிலையம் நிரம்பி வழிகிறது. பயணிகள் பலரும் பஸ்களில் இடம் கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி விபரம்:

“சென்னையில் இருந்து நாளை மாலை வரை, வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். ஆகையால் பயணிகள் கவலைப்பட தேவையில்லை.

சென்னை மாநகரப் பேருந்துகளையும் திருச்சி, திருவண்ணாமலை,…

Read More

சென்னை ஈரோடு காஞ்சிபுரம் மாவட்டங்களை தனிமைப்படுத்த உத்தரவு

by by Mar 22, 2020 0

இன்று 22 மார்ச் 2020 அன்று சுய ஊரடங்கை கடைபிடிக்க பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இன்று நாடுமுழுவதும் மக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள்ளே முடங்கினர்.
 
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று பீகார் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒருவர் பலியாகியதை அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370-ஐ தாண்டியுள்ளது.
 
இதனால் மத்திய அரசு கொரோனாவால் பாதித்த நாட்டில் உள்ள 75 மாவட்டங்களில் தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துக்கொள்ளலாம் என்று…

Read More

சட்டசபை வந்த உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை

by by Mar 16, 2020 0

இந்தியாவில் கொரோனா வைரசால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
 
தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டது.
 
சோதனைக்கு பிறகே எம்எல்எக்கள் சட்டசபைக்குள்  அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் சட்டசபை ஊழியர்களுக்கும் சோதனை நடத்தப்பட்டது.
 
தமிழகத்தில்…

Read More

தலைவர் மீது துரும்பு பட்டாலும் – தமிழக அரசை எச்சரித்த மக்கள் நீதி மையம்

by by Mar 3, 2020 0

கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கமல் கூறியபோது, “விபத்து நிகழ்ந்ததற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், அந்த தளத்தைவிட்டு வெளியேறினேன்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல்ஹாசனுக்கு காவல்துறை  சென்னை வேப்பேரி மத்திய…

Read More

ரஜினிக்கு சம்மன் அனுப்ப சீமான் தான் காரணம்..?

by by Feb 4, 2020 0

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

 
இதுவரை 18 கட்ட விசாரணை முடிந்துள்ள…

Read More

நம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்

by by Jan 27, 2020 0

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம்.

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர…

Read More