March 29, 2020
  • March 29, 2020

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

by on March 29, 2020 0

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான். அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்தப் படங்களை தன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ” […]

Read More

வெளியான விஷ்ணு விஷாலின் பெர்சனல் புகைப்படங்கள்

by on March 29, 2020 0

நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011-ம் ஆண்டு தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். ஆனால் கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தானும், தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் விஷ்ணு விஷால். தனது மனைவிக்கு இருந்த சந்தேகம்தான் தங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட காரணம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில்தான் நடிகர் விஷ்ணு […]

Read More

பரவை முனியம்மா உயிர் பறந்தது

by on March 29, 2020 0

மதுரை மாவட்டம் பரவை என்ற பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. நாட்டுப்புற பாடல்கள் மூலம் கிட்டதட்ட 30 ஆண்டுகள் பாடல் அந்த துறையில் கோலோச்சி வருபவர் இவர். வெளிநாடுகளிலும் கூட இவரது நாட்டுப்புற பாட்டுக்கு ரசிகர்கள் உருவாகினர். அங்கும் சில மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டுள்ளார். விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதுவரை 80 படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு 3 மகன்கள், 3 […]

Read More

அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளிய அக்‌ஷய் குமார்

by on March 28, 2020 0

இந்தி(ய) நடிகரான அக்‌ஷய் குமாரை நமக்கு 2.ஓ பட வில்லனாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஹீரோவாக நடித்த இந்திப் படங்களில் அற்புதமான வேடங்களை ஏற்று நடித்திருக்கிறார். இப்போது அக்‌ஷய் குமார் செய்திருக்கும் காரியம் அத்தனை இந்திய ஹீரோக்களையும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.  இப்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படும் பொருள் செலவுகளைச் சமாளிக்க மத்திய மாநில அரசுகள் பொருள் உதவி வேண்டி நிற்க, முன்னதாக தெலுங்கு ஹீரோக்கள் பிரதமர் மற்றும் முதல்வர்கள் நிதிக்கு உதவி புரிந்தனர். அதில் […]

Read More

யூ டியூப் மருத்துவர்களுக்கு கொரோனா தேவலாம் தங்கர் பச்சான் கவலை

by on March 28, 2020 0

சமூக வலைத்தளங்கள் ஏற்கனவே பாதி பேரை அதற்கு அடிமையாக மாற்றி வைத்திருந்தது! போதாக்குறைக்கு இந்த “கொரோனா” இருப்பவர்களையும் அவ்வாறு மாற்றாமல் போகாது போலிருக்கிறது! மூன்று வாரங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கும் நிலையால் மக்களின் மனநிலை நெருக்கடிக்குள்ளாகி இருப்பதை கவனிக்கிறேன். எவை எவற்றை வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளலாம் என சிந்திக்கும் நிலையை பலர் இழந்து விட்டதை காணமுடிகிறது. ஏற்கனவே இந்த யூடியூப் வரவால் பல திடீர் மருத்துவர்கள் உருவாகியிருந்தார்கள்! இப்பொழுது அப்படிபட்ட மருத்துவர்கள் மட்டுமே யூடியூப் எங்கும் நிரம்பிக் கிடக்கிறார்கள். […]

Read More

கமல் அலுவலகத்தில் கொரோனா ஸ்டிக்கர் – கமல் விளக்கம்

by on March 28, 2020 0

அக்கறை கொண்ட அனைவருக்கும் வணக்கம்… உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் மனமார்ந்த நன்றிகள். எனது இல்லத்தின் வெளியே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை வைத்து நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்த முகவரியில் கடந்த சில ஆண்டுகளாக நான் இல்லையென்பதும், அவ்விடத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்ததும் உங்களில் பலர் அறிந்ததே. எனவே நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்பதையும், வருமுன் தடுக்கும் நடவடிக்கையாக நான் கடந்த 2 வாரங்களாக தனிமைப்படுத்துதலை மேற்கொண்டிருக்கிறேன் என்பதையும், […]

Read More

நாளை முதல் தூர்தர்ஷனில் ராமாயணம் மறு ஒளிபரப்பு

by on March 27, 2020 0

மக்களின் கோரிக்கையை ஏற்று பிரபல தொலைக்காட்சித் தொடரான ராமாயணம் மீண்டும் ஒளிபரப்பாகும் என மத்திய அரசு அறிவிப்பு. ஜனவரி 1987 முதல் ஜுலை 1988 வரை ஞாயிறு காலை தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடர் மக்களின் மகத்தான வரவேற்பைப் பெற்றது. அந்தக் காலக்கட்டத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பானபோது சாலைகளில் மக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் குறைவாக இருந்தது. அத்தனைபேரும் ராமாயணம் பார்க்க வீடுகளில் முடங்கினார்கள்.  ராமானந்த் சாகர் இயக்கிய இந்தத் தொடரில் ராமராக அருண் கோவிலும் […]

Read More

சிரிக்க வைக்கும் வடிவேலு அழுது வெளியிட்டுள்ள வீடியோ

by on March 27, 2020 0

இன்றைக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசும், மாநில அரசுகளும் ஊரடங்கு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்க, வீடுகளில் முடங்கி இருக்கும் மக்களுக்கான ஆறுதல்களில் தலையாயது வடிவேலுவை வைத்து வலம் வரும் மீம்ஸ்கள்தான். எது பற்றிய விஷயமாக இருந்தாலும் அது வடிவேலு முகத்துடன் மீம்ஸாக வரும்போது நம் கவலையை மறக்க வைக்கிறது. காமெடி சேனல்களில் வரும் அவரது நகைச்சுவைப் பகுதிகளும் நம்மைக் களிப்புடனேயே வைத்திருக்கின்றன. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி […]

Read More
CLOSE
CLOSE