March 24, 2023
  • March 24, 2023
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஆரவ் திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது – ஓவியா கலந்து கொள்கிறார்?
August 26, 2020

ஆரவ் திருமணம் அடுத்த மாதம் நடக்கிறது – ஓவியா கலந்து கொள்கிறார்?

By 0 464 Views

சென்னை ஈ சி ஆர் சாலையிலுள்ள ரிசார்ட் ஒன்றில் வரும் செப்டம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ந‌டக்கிறது ‘பிக் பாஸ்’ முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ்வின் திருமணம்.

ஆரவ் திருமணம் செய்து கொள்ளப் போகிற பெண் ராஹே. யார் இந்த ராஹே?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லர் படமாகத் தயாராகி வரும் ‘ஜோஷ்வா’ மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் ராஹே.

ராஹே குடும்பமும் ஆரவ் குடும்பமும் ஏற்கனவே பழக்கமான வர்களாம். அந்தத் தொடர்பில் ஆரவ்-ராஹே இடையே நட்பு (லவ்வுன்னும் சொல்லலாம்) உண்டாகி, அதேநேரம் குடும்பத்தினர் இவர்களுக்கு திருமணம் செய்து வைத்தால் என்ன என்று  விரும்பி இருக்கிறார்கள்.

உடனே இவர்கள் 2 பேரிடமும் அந்த விருப்பத்தைச் சொல்லிச் சம்மதம் கேட்டதும், இவர்களும் உடனே சரி என்று சொல்லி, திருமணத் தேதி முடிவாகி இருக்கிறது.

எனவே இந்தக் கல்யாணத்தை லவ் கம் அரேஞ்டு மேரேஜ் என்று சொல்லலாமாம்.

டெயில் பீஸ் – திருமணத்தில் சீப் கெஸ்ட் ஆக ஓவியா கலந்து கொள்ளக் கூடும் என்று செய்தி பரவுகிறது.

அடடே..!