April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • அடுத்தடுத்து தாக்கிய நோய்களில் 35 வயதில் பலியான நடிகை – முதல்வர் இரங்கல்
August 11, 2021

அடுத்தடுத்து தாக்கிய நோய்களில் 35 வயதில் பலியான நடிகை – முதல்வர் இரங்கல்

By 0 391 Views

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ள சரண்யா சசி, மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் சரண்யா சசி. சரண்யா சசியின் மார்க்கெட் உயரும் நேரத்தில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் மன தைரியத்தை கொஞ்சமும் விடாத சரண்யா சசி இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார் சரண்யா சசி.

அவருடைய 11வது அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. படுத்த படுக்கையாக இருந்து வந்தார் சரண்யா சசி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய தண்டுவடத்திலும் நோய் பரவியதால் அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. ஆனால் தண்டுவடத்தில் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவர்கள் கை விரித்து விட்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 3ஆம் தேதி சரண்யா சசிக்கு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே கடந்த மே 23ஆம் தேதி சரண்யாவின் தாயாருக்கும் சகோதரருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சரண்யா சசிக்கும் கொரோனா தொற்று பரவியது. மேலும் அவரது உடல்நிலை மோசமடைந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மற்றும்  ஏற்கனவே இருந்த புற்றுநோய் உள்ளிட்ட பிரச்சனைகளால் சரண்யா சசியின் உடல் நிலை ரொம்பவே மோசமடைந்தது. இந்நிலையில் சரண்யா சசி நேற்று (10-08-2021) சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கேரள முதல்வர் பினராய் விஜயனும் சரண்யா சசியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கலில், கேரள மாநிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நடிகை சரண்யா சசி தனது மருத்துவச் செலவிலிருந்து ஒரு தொகையை மக்களுக்காக ஒதுக்கியதை அவர் நினைவு  கூர்ந்துள்ளார்.