July 1, 2025
  • July 1, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ
March 26, 2020

வைரலாகும் நடிகையின் வீட்டைச் சுத்தப்படுத்தும் உடற்பயிற்சி வீடியோ

By 0 730 Views

இந்தி, தெலுங்குப் படவுலகில் பிரபலமான ‘அடா ஷர்மா’ தமிழிலும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்திருக்கிறார். பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளி’ல் சிறப்புத் தோற்றத்தில் வந்திருக்கிறார்.

இவருக்கு நடிப்பதைவிட பெரிய வேலை தன் சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்களும், புகைப்படங்களும் போட்டு வைரல் ஆக்குவது. உடற்பயிற்சி செய்து உடலை ‘கும்’மென்று வைத்திருப்பதில் கில்லாடியான ‘அடா ஷர்மா’வின் வீடியோக்களைப் பார்ப்பதற்கே ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது. 

இப்போது கொரோனா பாதிப்புக்குள்ளாகாமல் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சியும், அதே நேரம் வீட்டை சுத்தம் செய்யும் வேலையையும் ஒருங்கே செய்ய ஒரு ஐடியாவைக் கண்டுபிடித்திருக்கிறார் ‘அடா’.

அது எப்படி என்பதை வீடியோவாக எடுத்துப் போட்டிருக்கிறார் பாருங்கள் அடா. அது ‘அடடா…’ 

வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்தால் வீடு சுத்தமாகி விடுமோ என்னமோ, ஆனால் மனது குப்பையாகி விடும்…