February 16, 2025
  • February 16, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரபல வில்லன் நடிகரின் மகன் பாலியல் வழக்கில் கைது
March 4, 2020

பிரபல வில்லன் நடிகரின் மகன் பாலியல் வழக்கில் கைது

By 0 649 Views

காலேஜ் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை சொல்லி எங்கெங்கோ அழைத்துக் கொண்டு போய், குளிர் பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக, பிரபல வில்லன் நடிகர் சூர்ய பிரகாஷின் மகன் விஜய் ஹரிஷைக் காவல் துறையினர் கைது செய்தது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தூரல் நின்னு போச்சு, முதல் மரியாதை, வசந்த காலம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தவர் நடிகர் சூர்ய காந்த்.

இவர் அண்மையில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தந்தையாக நடித்தவர். இவரது மகன் விஜய் ஹரிஷ், நாங்களும் நல்லவங்க தான் என்ற படத்தில் நடித்து வ ருகிறார்.

இவர், வண்ணாரப்பேட்டேயைச் சேர்ந்த பி.காம் இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் விஜய் ஹரிஷ்.

மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோ எடுத்து ஆன்லைனில் பதிவிடுவதாக மிரட்டி பலமுறை அந்த மாணவியுடன் உறவு கொண்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் நடிகர் விஜய் ஹரிஷை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.