April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • என்றும் காதல் நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் – காணக் கிடைக்காத வீடியோ
May 19, 2020

என்றும் காதல் நாயகன் நடிகர் முரளி பிறந்த நாள் – காணக் கிடைக்காத வீடியோ

By 0 916 Views

தமிழ்த் திரையுலகின் மூலம் காதலுக்கும், கல்லூரி மாணவத்துக்கும் தனி இலக்கணம் படைத்த திரைப்படங்களில் நடி த்து பெருமை படைத்தவர் நடிகர் முரளி.

புகழின் உச்சத்தில் இருக்கையில் தன் 46 வது வயதில் இறந்த முரளிக்கு இன்று 56 ஆம் பிறந்தநாள்.

1984ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில், அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான பூவிலங்கு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் இவர். இவரது அப்பா சித்தலிங்கையா, பிரபலமான கன்னடத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

கே.பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய வெற்றி நாயகர்கள் வரிசையில் இணைந்த குறிப்பிடத்தக்க இந்த நடிகர் முதல் படமே சூப்பர்ஹிட் ஆனதால் வெற்றிப் பட நாயகனாக உருவெடுத்தார். தொடர்ந்து பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்தார். காதல் படங்களுக்குத் தனி இலக்கணம் வகுத்தவை முரளி நடித்த படங்கள்.

இயக்குநர்கள் மணிரத்னத்தின் முதல் தமிழ்ப்படமான ‘பகல் நிலவு’, விக்ரமனின் முதல் படமான ‘புது வசந்தம்’, கதிரின் முதல்படமான ‘இதயம்’ என்று முரளி ஹீரோவான படங்களின் வெற்றி அவரை புது இயக்குநர்களின் தனிப்பெரும் ஹீரோவாகக் கருத வைத்தது. ‘முரளியின் முதல் படத்தை இயக்கும் இயக்குநர்கள் வெற்றிகரமான இயக்குநர்களாக வருவார்கள்’ என்ற சென்டிமென்ட்படி, அந்தக் காலகட்டத்தில் படம் இயக்க வந்தவர்களின் முதல் ஹீரோ சாய்ஸ் முரளியாகத்தான் இருந்தார்.

தன் புராஜக்ட்டுக்கான ஸ்கிரிப்ட் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ, தனக்குப் பிடித்திருந்தால் அந்த இயக்குநருக்குத் தன் சொந்தப்பணத்திலிருந்து அட்வான்ஸ் தரும் வழக்கத்தையும் வைத்திருந்தார் முரளி.

சென்டிமென்டைத் தாண்டி அற்புதமான ஸ்கிரிப்ட்டுகள் அவரைத்தேடி வர அதுவும் ஒரு காரணமாக இருந்தது. ஹீரோவான கணக்குப்படி 98 படங்களை முடித்து விட்டிருந்தார் முரளி.

அவரது அதிகம் பார்த்திராத பேட்டி வீடியோ கீழே…